மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

எங்கே வேண்டுமானாலும் ரேஷன் வாங்கலாம்!

எங்கே வேண்டுமானாலும் ரேஷன் வாங்கலாம்!

தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்கள் வாங்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு நடந்த உணவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ், ‘தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் பொதுவிநியோகத் திட்டத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை ஏற்றுக்கொள்கிறோம்’ என்று கூறினார்.

ஆனால், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தால் தமிழகப் பொது விநியோகத் திட்டத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று அச்சம் தெரிவித்த எதிர்க்கட்சிகள், அத்திட்டத்தில் தமிழகம் இணையக் கூடாது எனவும் வலியுறுத்தின. மேலும், வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவது குறித்துக் குறிப்பிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்காக தமிழகம் நிதிச்சுமையை ஏற்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் திருவாரூரில் நேற்று (செப்டம்பர் 5) செய்தியாளர்களிடம் பேசிய உணவுத் துறை அமைச்சர் காமராஜ், “வெளிமாநிலங்களிலிருந்து வந்து தமிழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் பசியில் வாடக் கூடாது என்பதற்காக அரிசியும், கோதுமையும் அவர்களுக்கு வழங்க மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான அரிசி, கோதுமையை மூன்று மாதங்களுக்கு மத்திய அரசே வழங்கிவிடும். வெளிமாநிலத்தினர் எத்தனை பேருக்கு வழங்கினாலும் அதை மத்திய அரசு கொடுத்துவிடும். அதில் என்ன தவறு இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.

“நம்முடைய ஒரு கோடி ரேஷன் அட்டைகளையும் மத்திய அரசிடம் அளித்துவிட்டதைப் போல எதிர்க்கட்சிகள் கருத்து சொல்வது நியாயமல்ல” என்று தெரிவித்த அமைச்சர், தமிழ்நாட்டுக்குள் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள் வாங்கும் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும். இந்தத் திட்டத்தை முதலமைச்சர் வெளிநாடு பயணத்தை முடித்த வந்த பின்பு தொடங்கி வைக்க உள்ளார். ஒரே ரேஷன் திட்டத்தால் தமிழகப் பொது விநியோக திட்டத்துக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி!


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்தானே அபராதம்: வைரல் வீடியோ!


ஸ்டாலினை பாஜக தலைவர் பாராட்டிய மர்மம்!


சிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா


வெள்ளி, 6 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon