மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

டிஜிபி, காவல் ஆணையருக்கு நீதிபதி எச்சரிக்கை!

டிஜிபி, காவல் ஆணையருக்கு நீதிபதி எச்சரிக்கை!

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் சரியாக ஆஜராகவில்லை என்றால் டிஜிபி மற்றும் காவல் ஆணையர் நேரில் ஆஜராக நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (செப்டம்பர் 5) உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விசாரணைகளில் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜராவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது, இந்த நிலையில், வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய காவல் துறை அதிகாரிகள் முறையாக ஆஜராவதில்லை. இதனால் தமிழக டிஜிபி திரிபாதி மற்றும் சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் வரும் 13ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிபதி வேல்முருகன் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்.

நீதிபதி உத்தரவை அடுத்து தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், டிஜிபி மற்றும் காவல் ஆணையர் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

இதை ஏற்ற நீதிபதி வேல்முருகன் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்தார். அப்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளுக்கும் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதிகாரிகள் இதைத் தவறும்பட்சத்தில் டிஜிபி மற்றும் காவல் ஆணையர் நேரில் ஆஜராக நேரிடும். எனவே, இது குறித்து தங்களுக்குக்கீழ் உள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று நீதிபதி வலியுறுத்தினார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி!


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்தானே அபராதம்: வைரல் வீடியோ!


ஸ்டாலினை பாஜக தலைவர் பாராட்டிய மர்மம்!


சிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா


வெள்ளி, 6 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon