மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

பப்ஜி: ஐந்து நாயகிகளின் பயங்கர கேம்!

பப்ஜி: ஐந்து நாயகிகளின் பயங்கர கேம்!வெற்றிநடை போடும் தமிழகம்

பொல்லாத உலகின் பயங்கர கேம் படத்தில் மேலும் மூன்று நாயகிகள் இணைந்துள்ளனர்.

‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (pubg) என்ற டைட்டிலின் சுருக்கிய வடிவமே பப்ஜி. பிக் பாஸ் போட்டியாளர் ஐஸ்வர்யா தத்தா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்குகிறார். இவர் இயக்கத்தில் ஏற்கெனவே தாதா 87 திரைப்படம் வெளியான நிலையில் தற்போது ‘பீட்ரு’ என்ற மற்றொரு படம் தயாராகிவருகிறது.

பப்ஜி படத்தில் ஐஸ்வர்யாவுடன் மேலும் சில கதாநாயகிகள் இணையவுள்ளதாக கூறப்பட்டது. தற்போது அந்த நாயகிகள் பற்றி இயக்குநர் கூறியுள்ளார்.

“மலையாளத் திரையுலகிலிருந்து அந்திரா நாயர், நிவேதா பட்டுலா, பெங்களூரைச் சேர்ந்த மாடல் சாந்தினி ஆகியோர் தற்போது இணைந்துள்ளனர். நாடோடிகள் படத்தில் சசிகுமார் தனது நண்பனை அவரது காதலியுடன் சேர்த்துவைக்கும் காட்சி முக்கிய இடம் பெற்றிருக்கும். அந்தக் காதலியாக நடித்தவர் சாந்தினி. ஆக்‌ஷனும், கிளாமரும் கலந்து இவர்களது கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும்” என்று இயக்குநர் விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும் படத்தில் ஐந்தாவது கதாநாயகியாக 2000களில் பிரபலமான ஒரு நடிகையை நடிக்கவைக்க இயக்குநர் முயற்சித்துவருகிறார்.

இதில் பப்ஜி என்ற கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் க்ரைம் பிராஞ்ச் ஆபிஸராக நடிக்கிறார். ஜூலியும், தாதா கதிரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி!


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்தானே அபராதம்: வைரல் வீடியோ!


ஸ்டாலினை பாஜக தலைவர் பாராட்டிய மர்மம்!


சிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா


வெள்ளி, 6 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon