மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

நீங்கள் ஸ்மார்ட் போன் காதலரா?

நீங்கள் ஸ்மார்ட் போன் காதலரா?

காவேரி மருத்துவமனை

அடிக்கடி வரும் எஸ்எம்எஸ், வாட்ஸ் அப், மெயில் போன்ற பல்வேறு தகவல்கள் உங்கள் ஸ்மார்ட் போனுக்கு மிகவும் இணக்கமாக இருக்கலாம். ஆனால், தொடர்ந்து உங்கள் ஸ்மார்ட் போனுடன் நீங்கள் இணைப்பில் இருந்தால் உங்களின் உடலில் சில பாதிப்புகள் உண்டாகும்.

காவேரி எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை மைய, அறுவை சிகிச்சை நிபுணர்கள் அதிகப்படியாக செல்போனைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க கூறும் அறிவுரைகள்:

1. செல்போன் முழங்கை

நீங்கள் அதிக நேரம் உங்கள் செல்போனில் உரையாட கூடியவர் எனில் உங்களுக்கு விலாவின் உட்பகுதி நோய் எனப்படும் (Cubital tunnel syndrome) எனும் செல்போன் முழங்கை பிரச்சினை ஏற்படலாம்.

2. கட்டைவிரல் குறுஞ்செய்தி

அதிகமான குறுஞ்செய்திகளை வேகமாக தட்டச்சு செய்யும்போது, நமது விரல்களில் கட்டை விரல்தான் செயல்படும். ஆனால், கட்டை விரலானது அதிகமாக வளையும் தன்மை கொண்டது அல்ல. அதிகமாக செல்போனில் தட்டச்சு செய்யும்போது உங்கள் விரலில் உள்ள தசை நார்கள் கிழிவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

மாற்றுவழி

உங்கள் கட்டைவிரலுக்கு பதிலாக ஆள்காட்டி விரலை தட்டச்சு செயலுக்குப் பயன்படுத்தலாம். இதனால் நீங்கள் தட்டச்சு செய்யும் வேகம் குறையலாம். ஆனால், கட்டை விரலுக்குச் சிறிது இடைவெளி கிடைக்கும்.

தட்டச்சு செய்வதற்குப் பதிலாக குரல் வழி செய்திகளை நாம் அனுப்பலாம்.

3. கழுத்து, முதுகு மற்றும் தோள் பட்டை வலி

எல்லா நேரங்களிலும் உங்களது செல்போனை குனிந்து பார்த்துக்கொண்டு இருந்தால் உங்களின் கழுத்து, முதுகு மற்றும் தோள்பட்டை தசையில் பிடிப்பு, விறைப்பு ஏற்படலாம்.

சில ஆராய்ச்சிகளில் இதனால் சிறு வயதிலேயே மூட்டுவீக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கும் என்கின்றது.

மாற்றுவழி

உங்கள் உடலில் கவனம் செலுத்தவும்.

உங்களுக்கு மேற்கண்ட ஏதேனும் வலிகள் ஏற்பட்டால் உடனடியாக நீங்கள் செல்போன் பயன்படுத்தும் முறையை மாற்றவோ அல்லது குறைக்கவோ செய்யுங்கள்.

உங்களின் இந்த வலியில் நீங்கள் சந்தேகம் கொண்டால் கீழ்கண்ட முதலுதவியைப் பின்பற்றவும்.

ஓய்வு: செல்போன் பயன்படுத்துவதால் உங்களின் உடலில் எந்த பகுதியில் வலியேற்படுகிறதோ அந்தப் பகுதிக்குச் சிறிது ஓய்வு கொடுக்கவும்.

ஐஸ்கட்டி: செல்போன் பயன்பாட்டால் முழங்கை, கழுத்து மற்றும் விரலில் எங்கேனும் வீக்கம் ஏற்பட்டால், உடனடியாக ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கவும்.

->உடல்பாகங்களில் ஏதேனும் அசெளகரியமாக உணர்ந்தால், உடனடியாக சிறிய தலையணையை எடுத்து அசெளகரியமான பகுதிகளுக்கு ஆதரவாக பயன்படுத்தவும்.

->வீக்கம் ஏற்பட்டால் அந்தப் பகுதியை இதய உயரத்துக்கு மேலே தூக்குவதன் மூலம் வீக்கத்தைக் குறைக்கலாம்.

மேற்கண்ட முதலுதவிகள் செய்தும் தொடர்ந்து வலி ஏற்பட்டால் மருத்துவரை அணுகவும். அவர் உங்களுக்கு மருந்தையோ அல்லது உடற்பயிற்சியையோ பரிந்துரைக்கலாம்.

காவேரி மருத்துவமனை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மையம்

உள்நாட்டு மற்றும் சர்வதேச நோயாளிகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குகிறது. மருத்துவ வல்லுநர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவ மற்றும் மருத்துவரல்லாத ஊழியர்கள் அடங்கிய மிகவும் திறமையான பலதரப்பட்ட குழு மூலம் பன்முக சிறப்பு மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை சேவைகளை வழங்குகிறது.

தொடர்பு கொள்ள: +91-431-4022555 / 4077777

(விளம்பரக் கட்டுரை)


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி!


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்தானே அபராதம்: வைரல் வீடியோ!


ஸ்டாலினை பாஜக தலைவர் பாராட்டிய மர்மம்!


சிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா


வெள்ளி, 6 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon