மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 21 அக் 2020

மழை விசாரணை!

 மழை விசாரணை!

விளம்பரம்

அலைபேசியில் நண்பர்களுடனோ உறவினர்களுடனோ பேசும்போது இப்போது நம்மையும் அறியாமல் நாம் கேட்கும் முக்கியமான கேள்வி, ‘அப்புறம் அங்க மழை உண்டா...?’ என்பது.

’இங்கே நல்ல மழை அங்கே எப்படி?”

’மூணு நாளா வெளுத்து வாங்குது...”

‘சந்தோஷம் சந்தோஷம் பயிர் பச்சைகளுக்கு நல்லதுதானே...”

“ஆமாம்... பசங்க இங்க ஸ்கூல் போறதுக்குதான் கஷ்டமா இருக்கு...”

-இப்படியாக போகிறது உரையாடல்.

https:tnwaterwise.com வழியாக அமைச்சர் வேலுமணியின் முன்னெடுப்பில் நடக்கும் மழைநீர் சேகரிப்பு சவால் மூலமாக நாம் சொல்வது என்னவென்றால், நீங்கள் அலைபேசியில் நடத்தும் இப்படிப்பட்ட இந்த மழை விசாரணையின் போது, மழை நீரை எப்படி சேமிக்க வேண்டும் என்பதற்கான குறிப்புகளையும் உங்களது மறுமுனைக் காரருக்கு சொல்லுங்கள்.

அது இன்னும் உபயோகமாக இருக்கும். மழை பற்றி விசாரிக்கும்போது மழை நீரை சேமிக்கிறீர்களா என்பதை முக்கியமான கேள்வியாகக் கேளுங்கள். அதற்கான டிப்ஸ் இதோ...

*சேமித்து வைத்த மழை நீரில் குப்பை சேர விடாதீர்.

*மழை காலத்திற்கு முன் தொட்டி மற்றும் குழாய்களை சுத்தம் செய்ய வேண்டும்.

* அதிகமான மழை பெய்யும் போது, நீர் பூமிக்குள் செல்லுமாறு வடிவமைக்கவும்.

*அதிக நாட்களுக்கு மழை நீரை சேமிக்கும்போது, பாசி படியாத வண்ணம் மூடி வைக்கவும்.

* மழை நீரின் வேகத்திற்கு தகுந்தவாறு கனமான குழாய்களை பயன்படுத்த வேண்டும்.

* மழைக்கும் துப்புரவு தொட்டிக்கும் தனித்தனி குழாய்கள் வைக்கவும்.

* மண்ணின் தன்மைக்கேற்ப மழை நீர் சேமிப்பு அமைய வேண்டும்.

*சேமிக்கும் குழாய்களில் உள்ள வடிகட்டிகளை சுத்தமாக வைக்க வேண்டும்.

* பழைய கிணறு மற்றும் தொட்டி இருந்தால் அதையே மழை நீர் சேமிப்பிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

* நீரின் அளவை காண்பிக்கும் கருவியை பொருத்தினால், சேமித்த நீரை சிக்கனமாக செலவு செய்யலாம்.

இவற்றையும் நம் நண்பர்களுக்குப் பரப்புவோம். மழை நீர் சவாலில் வெல்வோம்!

விளம்பர பகுதி

வியாழன், 5 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon