மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

சத்குரு எதிர்பார்க்கும் 242 கோடி!

 சத்குரு எதிர்பார்க்கும் 242 கோடி!

விளம்பரம்

சத்குரு அவர்களின் பிறந்தநாள் செப்டம்பர் 3 ஆம் தேதி... அதற்காக அவரது சீடர் ஒருவர், ‘இந்த சிறந்த நாளுக்காக தாங்கள் எங்களிடம் இருந்து எதிர்பார்க்கும் பரிசு என்ன?” என்று கேட்கிறார்.

அதற்கு சத்குரு அவர்கள் தன் கரகரத்த உறுதிக் குரலில், ‘242 கோடி’ என்று சொல்லத் தொடங்குகிறார். கூட்டம் கைதட்டத் தொடங்கி முடிப்பதற்குள் மரங்கள் என்று முடிக்கிறார் சத்குரு.

ஆம் 242 கோடி மரங்களைத்தான் நான் விரும்புகிறேன் 242 கோடி என்றால் வேறு ஏதுமில்லை என்று சத்குரு தொடங்க மேலும் மேலும் சுவாரஸ்யமாகிறது இந்த சபை.

தன் பிறந்தநாளின் போது காவேரியின் கூக்குரலை இந்த நாடறிய வேண்டும் என்றும், காவேரியின் கூக்குரலுக்குக் காது கொடுக்க வேண்டும் என்றுதான், காவேரியின் கூக்குரல் என்ற மிகப்பெரிய ஓர் மோட்டார் சைக்கிள் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் சத்குரு. செப்டம்பர் 3 ஆம் தேதி தன் பிறந்தநாளன்று தலைக்காவேரியில் இருந்து காவேரிக் கூக்குரலை ஓங்கி ஒலிப்பதற்காகப் பெருந்திரளான இயற்கை ஆர்வலர்களுடன் தன் மோட்டார் சைக்கிள் பேரணியைத் துவக்கியிருக்கிறார்.

ஆம்... 242 கோடி மரங்களை இந்த மண்ணுக்கு அளித்தால்தான் காவேரி போன்ற ஏராளமான நதிகளை மீட்டெடுக்க முடியும், அவற்றின் பாதையில் வளமையைத் திருப்ப முடியும், கடல் சென்று சேரும் வரை அந்த ஆறுகளில் ஜீவ நீர் இருப்பதை உறுதி செய்ய முடியும் என்பதால்தான், அப்படி ஒரு மெகா பரிசை நம்மிடம் இருந்து எதிர்பார்க்கிறார் சத்குரு.’

செப்டம்பர் 3 ஆம் தேதி தலைக்காவேரியிலிருந்து, காவேரி கூக்குரல் மோட்டார் சைக்கிள் பேரணி புறப்பட்டபோது பருவ மழை கொட்டிக் கொண்டிருந்தது. எலும்பும் உறைந்துவிடும் இந்த மழையிலிருந்துதான் காவேரிக்கான பயணத்தைத் துவக்கியிருக்கிறார் சத்குரு.

சத்குருவின் பிறந்தநாளுக்காக ஏராளமானோர் வாழ்த்தினார்கள். பிரதமர் மோடி அவர்கள், “ உங்கள் முயற்சியைப் பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி. இன்று நீங்கள் முன்னெடுக்கும் பயணம் ஜல் சக்தியைப் பயன்படுத்துவதற்கான முயற்சிக்குத் தோள் கொடுக்கும். தேவையற்ற தண்ணீரை வீணாக்குவதை தடுக்கும். உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! உங்கள் நீண்ட ஆயுளுக்கும் சிறந்த ஆரோக்கியத்துக்கும் பிரார்த்தனை! ” என்று கூறியிருந்தார்.

பற்பல பேர் சத்குருவுக்கு பல்வேறு ஊடகங்கள் வழியாக வாழ்த்து சொல்லிக் கொண்டிருந்தனர். கொட்டுகின்ற மழை என்ற ஊடகம் வழியாக இயற்கை அன்னையும் சத்குருவுக்குத் தாரை தாரையாய் வாழ்த்துகளை வழிய விட்டுக் கொண்டிருந்தாள்.

காவேரி கூக்குரலின் 3500 கிலோ மீட்டர் பயணம் இனிதே தொடங்கியது.,.. நாமும் பின் தொடர்வோம் சத்குருவை

(பயணம் தொடரும்)

விளம்பர பகுதி

வியாழன், 5 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon