மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 5 செப் 2019

74 வயதில் ’ட்வின்ஸ்’ பெற்ற சாதனைப் பாட்டி!

74 வயதில் ’ட்வின்ஸ்’ பெற்ற சாதனைப் பாட்டி!

ஆந்திர மாநிலம் குண்டூரில் 74 வயதான ஒருவர், இரட்டை குழந்தை பெற்று அதிக வயதில் குழந்தை பெற்ற பெண் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ ராவ்(80). இவரது மனைவி எர்ராமட்டி மங்கம்மா(74) இவர்களுக்கு 1962ல் திருமணம் ஆகியுள்ளது, கடந்த 57 ஆண்டுகளாக இவர்களுக்குக் குழந்தை இல்லை. பலமுறை மருத்துவச் சிகிச்சைகள் பெற்றும் குழந்தை பாக்கியம் இல்லை. மங்கம்மாவுக்கு மாத விலக்கு நின்றும் பல ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்நிலையில் 55 வயதான பெண் ஒருவர் கருத்தரித்தது தொடர்பாகச் செய்தி அறிந்து, கடந்தாண்டு குண்டூரில் உள்ள அகல்யா என்ற மருத்துவமனைக்கு சென்று குழந்தை பெற்றுக் கொள்வதற்காகச் சிகிச்சை மேற்கொண்டிருக்கிறார் மங்கம்மா.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மங்கம்மாவுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை உட்பட எந்த நோயும் இல்லாததால் அவருக்கு In Vitro Fertilisation (ஐவிஎஃப்) கருத்தரித்தல் மூலம் குழந்தை பெற உதவியுள்ளனர். இதன்மூலம் அவர் கருவுற்று அழகான இரு குழந்தைகளுக்கு இன்று (செப்டம்பர் 5) தாயாகியிருக்கிறார்.

இன்று காலை 10.30 மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் அவருக்குக் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் சனக்காயலா உமா சங்கர் கூறுகையில், “தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர். கடந்த சில மணி நேரங்களாக அவருக்கு ஏற்பட்ட உடல் மற்றும் மன அழுத்தம் காரணமாக மங்கம்மா மட்டும் தீவிர கிசிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். 74 வயதில் அவருக்கு குழந்தை பிறந்தது ஒரு அரிய நிகழ்வு. நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற மருத்துவ சிக்கல்கள் எதுவும் இல்லாததால் மங்கம்மாவுக்கு இந்த வயதில் கூட கருத்தரிப்பதிலும் பிரசவத்திலும் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. அவரால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாது. இதனால் பிரச்சினை ஏதும் இல்லை. தாய்ப்பால் வங்கி மூலம் குழந்தைகளுக்குப் பால் கொடுக்கப்படும்.

பல மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெற்றும் அவரால் கருத்தரிக்க முடியவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பே அவருக்கு மாத விலக்கு நின்றுள்ளது. எனினும் தான் தாயாகவேண்டும் என்ற ஆசை மட்டும் அவருக்குத் தொடர்ந்து இருந்துள்ளது. இந்த வயதிலும் தாயாக வேண்டும் என்ற அவரின் மன உறுதி எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவரை பரிசோதித்ததில் In Vitro Fertilisation சிகிச்சைக்குத் தகுதியானவராக இருந்தார். அவருக்கு ஏற்கனவே மாதவிடாய் நின்றதால் அவரால் கரு முட்டைகளை உற்பத்தி செய்ய முடியவில்லை. இதனால் டோனாரிடம் இருந்து கருமுட்டை வாங்கி, ராஜ ராவின் விந்தணுக்களுடன் ஐவிஎஃப் மருத்துவப் படி சிகிச்சை வழங்கினோம். முதல் சுழற்சியிலேயே அவர் கருத்தரித்தார். கடந்த ஜனவரி மாதம் கர்ப்பமாக இருந்ததைக் கண்டறிந்தோம். அன்று முதல், இதயநோய் மருத்துவர்கள், நுரையீரல் நிபுணர்கள், மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தொடர்ந்து மங்கம்மாவைக் கண்காணித்து வந்தனர். அவரது வயது முதிர்வைக் கருத்தில் கொண்டு, அறுவை சிகிச்சை மூலம் இன்று குழந்தைகளை வெளி உலகுக்குக் கொண்டு வந்தோம்” என்றார். இதன்மூலம் மிக அதிக வயதில் இரட்டை குழந்தைகளைப் பெற்ற பெண் என்ற சாதனையை அடைந்துள்ளார் மங்கம்மா.

ஐ.வி.எஃப் போன்ற மருத்துவ தொழில் நுட்பங்கள் இயற்கையான மாதவிடாய் சுழற்சி முடிந்த பிறகும் பெண்கள் கர்ப்பமாக உதவுகின்றன.

முன்னதாக பஞ்சாபின் அமிர்தசரஸைச் சேர்ந்த தல்ஜீந்தர் கவுர், 2017ஆம் ஆண்டில், தனது 72ஆவது வயதில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி!


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்தானே அபராதம்: வைரல் வீடியோ!


சிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா


பாஜகவில் ரஜினி கேட்கும் பதவி!


ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்! ...

6 நிமிட வாசிப்பு

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

'மன்னிப்பு கேட்க வேண்டும்': தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் ...

6 நிமிட வாசிப்பு

'மன்னிப்பு கேட்க வேண்டும்': தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் குரல்கள்!

வியாழன் 5 செப் 2019