மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

ஆசிரியர் தின கொண்டாட்டத்தில் அர்த்தமுள்ளதா?

ஆசிரியர் தின கொண்டாட்டத்தில் அர்த்தமுள்ளதா?

ஆசிரியர்கள் தினமான இன்று (செப்டம்பர் 5) ஆசிரிய சமுதாயத்தின் மீது மத்திய, மாநில அரசுகள் தொடுத்துவரும் தாக்குதலை மின்னம்பலம்.காம் தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிகை மூலமாகப் பகிர்ந்துகொள்கிறார் மதுரை பேராயூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சுரேஷ்.

“இந்த ஆண்டு, மத்திய மாநில அரசுகள், கல்`வித்துறை மீதும் ஆசிரியர்கள் மீதும் கடுமையான தாக்குதல்களைத் தொடக்கத் துவங்கியுள்ள ஆண்டு என்பதை நினைவுக் கூற கடமைப்பட்டுள்ளேன். இந்த தினத்தைக் கொண்டாட்டத்தை விட எச்சரிக்கை உணர்வே ஆசிரிய சமுதாயத்துக்கு அதிகம் இருக்க வேண்டும்.

தமிழக அரசு மாணவர்கள் எண்ணிக்கையைக் காரணம் காட்டி 500 ஆரம்ப பள்ளிகளை நூலகமாக மாற்றியதும் இந்த ஆண்டுதான். மேலும் கல்வியைத் தனியார் மயமாக்கியதன் காரணமாகவும், கல்விகளை உரிமைச் சட்டம் காரணத்தை காண்பித்து தனியார்ப் பள்ளிகளில் 25% சதவீதம் மாணவர்களுக்கு அரசு கட்டணம் செலுத்தி, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களைத் தனியார்ப் பள்ளிகளுக்கு அனுப்பும் கொடுமையான நிகழ்வும் இந்த ஆண்டுதான்.

இதன் காரணமாக அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக் குறைந்து, பத்து மாணவர்களுக்குக் குறைவாகவுள்ள துவக்கப் பள்ளியின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயர்ந்துள்ளது. இவற்றைத் தமிழக அரசு மூடுவதற்கும், அருகே உள்ள பள்ளிகளுடன் இணைப்பதற்கும் திட்டமிட்டு அரசு ஆணை எண் 145 வெளியிட்டுள்ளது. இந்த செயல் கல்வித்துறை, ஆசிரியர்கள், மாணவர்கள் மீது மிகப் பெரும் தாக்குதலாகும்.

மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இலவச கல்வியை முற்றிலும் பறிக்கின்ற ஒரு புதிய கல்விக் கொள்கையை அறிவித்திருக்கக் கூடிய ஆண்டும் இதுதான். கல்வியை வணிக மையமாகி மேலும் குல கல்வி முறையாக்கும் வேலையைத் துவங்கியுள்ளது மத்திய அரசு.

மத்திய, மாநில அரசுகளின் நாசக்கார கல்விக் கொள்கையிலிருந்து, மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியைக் காப்பாற்ற, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றவும் இந்த ஆசிரியர் தின நாளன்று உறுதியெடுத்துக் கொள்ளவேண்டும். இந்த தினத்தில் வாழ்த்துகள் பரிமாறிக் கொள்வதை விட உறுதியேற்றுக் கொள்வதே உத்தமம்” என்கிறார் சுரேஷ்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி!


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்தானே அபராதம்: வைரல் வீடியோ!


சிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா


பாஜகவில் ரஜினி கேட்கும் பதவி!


வியாழன், 5 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon