மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

ஒதுங்கும் தனுஷ், முந்தும் சித்தார்த்

ஒதுங்கும் தனுஷ், முந்தும் சித்தார்த்

தனுஷ் நடிப்பில் நீண்ட காலமாக தயாரிப்பில் உள்ள எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் நாளை (செப்டம்பர் 6) வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ரிலீஸ் தள்ளிப்போகும் சூழல் நிலவிவருகிறது.

தனுஷ், மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் பணிகள் 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. கௌதம் மேனன் இயக்கியதோடு தனது ‘ஒன்றாக எண்டர்டெய்ன்மெண்ட்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

படத்தயாரிப்பு நிறுவனத்துக்கும் பைனான்ஸியர்களுக்கும் இடையே எழுந்த கடன் பிரச்சினை தீர்வு எட்டப்படாமல் உள்ளதால் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப்போனது. இந்நிலையில் ஆகஸ்ட் 24ஆம் தேதி படத்தின் டிரெய்லரை வெளியிட்ட படக்குழு, செப்டம்பர் 6ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்றும் அறிவித்தது.

ஆனால் பைனான்ஸியர்களுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில் நாளை திட்டமிட்டபடி படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டால் படம் நாளை வெளியாகும்.

ஏற்கெனவே இந்த வாரம் எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்துடன் ஆர்யா நடிக்கும் மகாமுனி, ஜாம்பி ஆகிய படங்கள் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டன. எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் ரிலீஸ் சிக்கல் நிலவுவதால் சித்தார்த், ஜி.வி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் நாளை (செப்டம்பர் 6) ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சசி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த வாரம் (செப்டம்பர் 13) வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி!


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்தானே அபராதம்: வைரல் வீடியோ!


சிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா


பாஜகவில் ரஜினி கேட்கும் பதவி!


வியாழன், 5 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon