மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 15 ஜன 2021

கமலைக் குறிவைக்கிறாரா மதுமிதா?

கமலைக் குறிவைக்கிறாரா மதுமிதா?

நடிகை மதுமிதா பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி ஒரு மாதத்துக்கு மேலாகியும் அவருக்கும் நிகழ்ச்சி நிர்வாகத்துக்குமான பிரச்சினை தொடர்ந்து வருகிறது.

நிகழ்ச்சியின் டாஸ்க் ஒன்றில் தனக்குத் தானே தீங்கு விளைவித்துக்கொண்டதாக நடிகை மதுமிதா வெளியேற்றப்பட்டார். ஆனால், பிக்பாஸ் வீட்டில் நடந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாமல் மதுமிதாவை வெளியேற்றிய பிக் பாஸ், “டாஸ்க்குக்குப் பின் நடந்த விவாதத்தில் தன்னுடைய கருத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா தனக்குத்தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டார். அவரின் இந்தச் செயல் பிக் பாஸ் வீட்டின் முக்கிய விதியை உடைத்து எறிவதாகும். இந்த அடிப்படையில் பிக் பாஸ் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டார்” என்றும் நிகழ்ச்சிக் குழு தெரிவித்தது.

சர்ச்சைக்குரிய வகையில் வெளியேற்றப்பட்ட பின் அவர் சம்பளப் பாக்கி கேட்டு தற்கொலை மிரட்டல் விடுத்ததாக விஜய் டிவி நிர்வாகம் காவல் துறையில் புகார் அளித்தது. அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த மதுமிதா தனக்குச் சேரவேண்டிய சம்பளத்தைத் தருவதாக கூறிவிட்டு சம்பந்தமில்லாமல் புகார் அளித்திருப்பதாகக் குற்றம்சாட்டினார்.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது சக போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், அதை நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல் கண்டிக்கவில்லை என்றும் நசரத் பேட்டை காவல் நிலையத்தில் தபால் மூலம் புகார் அளித்துள்ளார். தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வலுகட்டாயமாக வெளியேற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ


தினகரன் -ஸ்டாலின் பப்பீஸ் டீல் : அதிமுகவின் தேர்தல் திட்டம்!!


பாஜகவில் ரஜினி கேட்கும் பதவி!


‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி


வியாழன், 5 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon