மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 5 செப் 2019

ஸ்டாலினை பாஜக தலைவர் பாராட்டிய மர்மம்!

ஸ்டாலினை  பாஜக தலைவர் பாராட்டிய மர்மம்!

தமிழக பாஜக தலைவர் யார் என்ற ரேஸ் இன்னும் நடந்துகொண்டிருக்கும் நிலையில், அந்தப் பந்தயத்தில் இருக்கும் பாஜகவின் மூத்த தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வெளிப்படையாக பாராட்டிப் பேசியது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அமைச்சரும், திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான வெள்ளக்கோயில் சாமிநாதன் இல்லத் திருமணம் திருப்பூரில் இன்று (செப்டம்பர் 5) நடைபெற்றது. அதில் திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக பாஜக முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன் மணமக்களை வாழ்த்திவிட்டு அமர்வார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். தற்போது தமிழகத்தின் புதிய பாஜக தலைவர் யார் என்று இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அதற்கு வாய்ப்பிருக்கக் கூடிய தலைவர்கள் பட்டியலில் சிபிஆர் இருக்கிறார். எனவே இந்த நிலையில் திமுக பிரமுகரின் திருமண மேடையில் சிபிஆர் ஏறியதே பாஜகவினர் பலருக்கும் வியப்பாக இருந்தது.

இந்நிலையில் மேடையேறி அவர் பேசிய பேச்சு வியப்பைத் தாண்டி பாஜகவுக்குள் சலசலப்பையும் ஏற்படுத்தியது. மேடையில் மணமக்களை வாழ்த்திவிட்டு ஸ்டாலின் பக்கம் திரும்பிய சிபிஆர், “கலைஞருக்கு பிறகு யார் என்று வரும்போது தளபதியாக மட்டுமல்லாமல் எங்களையெல்லாம் வீழ்த்திய வெற்றித் தளபதியாக ஸ்டாலின் உள்ளார். அதிலிருந்து நான் ஒன்றைத்தான் எடுத்துக்கொள்கிறேன். கலைஞரைப் போல நாங்கள் இன்னும் உழைக்க வேண்டியுள்ளது” என்று புகழ்ந்தார்.

திமுகவும், பாஜகவும் அரசியல் களத்தில் கடுமையாக மோதிக் கொண்டிருக்கிற நிலையில் ஸ்டாலினை தளபதி என்று அழைத்து சி.பி.ராதாகிருஷ்ணன் பாராட்டியது பற்றி பாஜகவுக்குள்ளேயே விவாதம் கிளம்பியது.

“அடுத்த மாநிலத் தலைவராக வர வேண்டும் என்று சிபி ராதாகிருஷ்ணன் கடுமையாக முயற்சி செய்தார். ஆனால் அது நடக்காது என்று அவருக்குத் தெரிந்துவிட்டது. தலைமை மீதிருக்கும் அந்த கோபத்தைதான் ஸ்டாலின் மீதான பாராட்டாக சிபிஆர் வெளிப்படுத்திவிட்டார். பாஜக தலைவர் தேர்வுக்கு முன்பே இப்படிப்பட்ட மோதல் என்றால், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு என்ன நடக்குமோ?” என்கிறார்கள் கொங்கு பாஜகவினர்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி!


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்தானே அபராதம்: வைரல் வீடியோ!


சிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா


பாஜகவில் ரஜினி கேட்கும் பதவி!


ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

வியாழன் 5 செப் 2019