மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 5 செப் 2019

வடிவேலு ஆசானுக்கு வாழ்த்து சொல்லணும்: அப்டேட் குமாரு

வடிவேலு ஆசானுக்கு வாழ்த்து சொல்லணும்: அப்டேட் குமாரு

இன்னைக்கு ஆசிரியர் தினம். மீம்ஸ் கிரியேட்டர்ஸ் எல்லாம் ஒண்ணு சேர்ந்து வாழ்த்து சொல்லனும்னா யாருக்கு சொல்வாங்க.. ஒரே ஆளு நம்ம வடிவேலு தான். அதனால காலையிலேயே அவர் போட்டோவை பசங்க ஷேர் பண்ணிட்டு இருக்காங்க.

“இம்புட்டுக்காண்டு பிள்ளை பலூன் கேட்டதுக்கு வாங்கிகொடுக்க துப்பில்ல, ஆட்டக்காரிக்கு 500 ரூவாயா”ன்னு களவாணி படத்துல கஞ்சா கருப்பை அவர் வீட்டம்மா திட்டும்ல அந்த சீனை எடுத்து பிரதமருக்கு ஃபார்வர்டு பண்ணிட்டு இருக்காங்க. ஒண்ணும் இல்ல, நாட்டோட பொருளாதாரமே ஆடிப்போயிருக்குன்னு சொல்றாங்க, ரிசர்வ் பேங்குல இருந்து கொத்தா பணத்தை டிரான்ஸ்ஃபர் பண்றாருன்னு ஏற்கெனவே ஆயிரம் கம்ப்ளைண்ட் வரிசையில நிற்கும் போது ரஷ்யாவுக்கு 7000 கோடி ரூபாயை தூக்கி கொடுத்துட்டாருன்னு தகவல் வந்த உடனே பசங்க உக்கிரமா களமாட ஆரம்பிச்சுட்டாங்க.

இந்தப் பக்கம் பார்த்தா மீம்ஸ் கிரியேட்டர்ஸ் விட்டெறிஞ்ச கல்லை எடுத்துதான் தமிழிசை மேடம் கோட்டை கட்டுனாங்களாம். அதனால பசங்க சார்பா அவங்கட்ட போய் வாடகை வசூல் பண்ணிட்டு வந்துடுறேன். அப்டேட்டை பாருங்க.

mohanram.ko

டிவியில் ஓடும் பாட்டில் லயித்துப் போய் முணுமுணுக்கும் போது, கேஷுவலாக சேனலை மாற்றிவிட்டு செல்லும் மனைவி சொல்லாமல் சொல்வது, 'வாயை மூடுங்க'

எனக்கொரு டவுட்டு

இன்னும் நாட்டாமை பட டீச்சர் போட்டோவையோ, முந்தானை பட முடிச்சு டீச்சர் போட்டோவையோ போட்டு டீச்சர் வாழ்த்து சொல்லலேன்னு நினைக்கும்போது கொஞ்சம் நிம்மதியா இருக்கு..!

ஜோக்கர்...

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் பள்ளிக்கு வருகையிலே,

அவன் "அறிஞர் அண்ணாவாய்" ஆவதும்,

"அமித்ஷாவாய்" ஆவதும் ஆசிரியர் கையினிலே..!

கோழியின் கிறுக்கல்!!

எங்க வீட்டுக்காரர் ரொம்ப பொறுமையானவர்' என்பதன் பொருள் 'எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான், அவன் ரொம்ப நல்லவன்' என்பதாகும்!!

எனக்கொரு டவுட்டு

அடிச்சு கொன்னுபுடுவேன் என்று சொல்லும் அம்மாக்கள் பயமில்லை, அடிக்க மாட்டேன் வாடா என்று சொல்லும் அம்மாக்களே டேஞ்சுரஸ்..!

ஆதித்தன்

லாஸ்லியாக்கு ஏன்டா ஓட்டு போட்டனு மேன்சன்ல திட்டிட்டு இருக்காங்க.. டேய் எண்பது லட்சம் பேர் பாஜக-அதிமுக கூட்டணிக்கு ஓட்டு போட்டானுகளே அவனுகள திட்னீங்களாடா நீங்க

மெத்த வீட்டான்

வில்லனாக தெரிந்து ஹீரோவாக ஆனவர்கள் அப்பாவும் ஆசிரியர்களும்தான் !

James Stanly

இன்னிக்கு ஆசிரியர்தின வாழ்த்து சொல்றவன்லா யாருப்பு..

நேத்து நான் திட்டிபுட்டேனு என் பைக்க பஞ்சராக்குன பயலுவதேன்..

ஜோக்கர்..

"கடைசியாய் அழுதது எப்போது" என தொடங்கி,

"கடைசியாய் சிரித்தது எப்போது" என்ற கேள்வியோடு முடிகிறது வாழ்க்கை..!!!

செந்திலின்_கிறுக்கல்கள்

ஆபிஸ் டைமில் தூங்க வைப்பது ரோலிங் சேருக்கான டிசைன்!

மயக்குநன்

முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் 'வெளிப்படையாக' நடைபெற்று வருகிறது!- கடம்பூர் ராஜூ.

அதுசரி... கட்சியில ஏதும் 'உள்குத்து' வேலை நடக்கலையே..?

ச ப் பா ணி

வாங்க மறந்த பொருளுக்கு பதிலாக பொய்யை வாங்கிச் செல்கிறோம் வீட்டிற்கு..!!

மயக்குநன்

திமுக திமிங்கலம் என்றால், அதிமுக திமிங்கலத்துக்கே விளையாட்டு காட்டும் விலாங்கு மீன்!- அமைச்சர் ஜெயக்குமார்.

மொத்தத்தில்... ரெண்டு கட்சிகளுமே செல்'ஃபிஷ்'தான்னு சொல்லுங்க..!

செந்திலின்_கிறுக்கல்கள்

கோழியில் இருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்ற கேள்வி மட்டுமே நம்மை சில நிமிடங்கள் ஜி.டி நாயுடுவாக மாற்றுகிறது!

கிப்சன்

எங்க நமக்கு தலைவர் பதவி குடுத்துருவாங்களோனு பயத்தில தான் சிபி.ராதாகிருஷ்ணன் ஸ்டாலின புகழ்ந்திருக்காரு போல

அவரு கண்ணுல அப்படியொரு மரண பீதி

ரஹீம் கஸ்ஸாலி

நமக்கான தனித்துவம் என்று சில விஷயங்களை நினைத்துக்கொண்டிருப்போம். அதுவே சில நேரங்களில் ஓவர் டோஸாக மாறிவிடும்.

-லாக் ஆஃப்


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி!


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்தானே அபராதம்: வைரல் வீடியோ!


சிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா


பாஜகவில் ரஜினி கேட்கும் பதவி!


ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

வியாழன் 5 செப் 2019