மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

அன்று காசி, இன்று தேனி: மீண்டும் சர்ச்சையில் பன்னீர்

அன்று காசி, இன்று தேனி: மீண்டும் சர்ச்சையில் பன்னீர்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்துகொண்ட எம்.பி ரவீந்திரநாத் குமார், “நாம் அனைவரும் முதல் ஹிந்து. பிறகுதான் மற்றவையெல்லாம்” என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் நேற்று (செப்டம்பர் 4) 16 அடி உயர வீரவிக்னேஷ்வரர் மற்றும் 151 விநாயகர்களுடன் ஊர்வலம் நடைபெற்றது. இந்து அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தை துவக்கி வைத்த தேனி மக்களவை தொகுதி உறுப்பினரும், துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகனுமான ரவீந்திரநாத், அதன்பிறகு பொதுக் கூட்டத்திலும் வாழ்த்துரை வழங்கினார்.

காவித் துண்டுடன் கூட்டத்தில் தோன்றிய ரவீந்திரநாத் மேடையில் பேசும்போது, “கடந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நான் தான் துவக்கி வைத்தேன். இந்த ஆண்டு மக்களவை உறுப்பினராக துவக்கி வைத்துள்ளேன். நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். இந்தியா ஒரு பாதுகாப்பான பாரதம். உலக நாடுகள் மத்தியில் இந்தியா ஒரு வல்லரசு நாடாக மாற வேண்டும். எனவே நமக்குள் இருக்கும் ஒற்றுமையை நாம் கடைபிடிக்க வேண்டும். நாம் அனைவரும் முதல் ஹிந்து. பிறகுதான் மற்றவையெல்லாம் என்ற உணர்வு நமக்குள் ஏற்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

மதச்சார்பற்ற கட்சி என்று கூறும் கட்சியான அதிமுகவின் எம்.பியே, மத உணர்வை தூண்டும் வகையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரவீந்திரநாத் குமாருக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் எழுந்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் மோடி வேட்புமனு தாக்கல் செய்த சமயத்தில் வாரணாசி சென்ற துணை முதல்வர் பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் இருவரும் காவி வேட்டி உடுத்திக் நிகழ்வில் கலந்துகொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்களும் வைரலானது. இந்த நிலையில் இந்து அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட விநாயகர் ஊர்வலத்தில் காவித் துண்டு அணிந்து கலந்துகொண்டிருக்கிறார் ரவீந்திரநாத்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி!


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்தானே அபராதம்: வைரல் வீடியோ!


சிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா


பாஜகவில் ரஜினி கேட்கும் பதவி!


வியாழன், 5 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon