மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

சிதம்பரத்தை காங்கிரஸ் கைவிட்டது ஏன்? - அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி

சிதம்பரத்தை காங்கிரஸ் கைவிட்டது ஏன்? - அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி

‘காங்கிரஸ் கட்சியில் ஒரு குடும்ப ஆதிக்கம் நிலவிவருகிறது’ என்ற விமர்சனம் நெடுங்காலமாக எழுந்து வருகிறது.

காமராஜர் புறக்கணிக்கப்பட்டதற்கான காரணமே நேரு குடும்பமும் அவர்களின் ஆதிக்கமும் தான் என்றும் அதன் காரணமாகவே காமராஜருக்கு வசப்பட வேண்டிய பல வாய்ப்புகள் கிடைக்காமல் போனது என்றும் பல காலமாக அரசியல் ஆராய்ச்சியாளர் ரவீந்திரன் துரைசாமி விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், நேரு குடும்பத்தை சாராத ஒரு முக்கிய தலைவர் என்ற கோணத்தில் அணுக இயலாதா? என்ற கேள்வி ரவீந்திரன் துரைசாமியிடம் கேட்கப்பட்டது.

காமராஜருக்கும் நேருவிற்குமான நெருக்கம், பட்டேலுக்கும் நேருவிற்கும் இடையேயான நெருடல், காமராஜருக்கு அரசியல் பின்னடைவு ஏற்பட்டதற்கான காரணம் போன்ற பல தகவல்களை வெளிப்படுத்தி, நரேந்திர மோடி பிரதமராவதற்கு முக்கியக் காரணம் வி.பி.சிங் என்ற கருத்தை வெளிப்படுத்தி அதற்கான காரணத்தையும் அவர் விளக்குகிறார்.

ப.சிதம்பரம் தனது அதிகாரத்தை எதற்காகப் பயன்படுத்தினார்? சிதம்பரத்தை கைது செய்ததனால் நரேந்திர மோடிக்குக் கிடைத்த ஆதாயம் என்ன? சிதம்பரத்தின் செயல்பாட்டால் மன்மோகன் சிங்கிற்கு ஏற்பட்ட தாக்கம் என்ன?, போன்ற கேள்விகளுக்கு சுவாரசியமான விடைகளைத் தருகிறார் அரசியல் ஆராய்ச்சியாளர் ரவீந்திரன் துரைசாமி. அவர் நமது மின்னம்பலம் தினசரிக்கு அளித்த சிறப்பு பேட்டியின் வீடியோ கீழே இடம் பெற்றுள்ளது.

முதல் பாகம் : 'ஸ்டாலின் - கங்காருக்குட்டி' 'எடப்பாடி - கன்றுக்குட்டி' - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி!


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்தானே அபராதம்: வைரல் வீடியோ!


சிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா


பாஜகவில் ரஜினி கேட்கும் பதவி!


வியாழன், 5 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon