மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

கைது பயத்தில் ஸ்டாலின்: ஜெயக்குமார்

கைது பயத்தில் ஸ்டாலின்: ஜெயக்குமார்

சிதம்பரம் கைதுக்குப் பிறகு ஸ்டாலின் மத்திய அரசு அதிகமாக விமர்சிப்பதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் வைக்கப்பட்டார். இந்த நிலையில் சிதம்பரத்தை வரும் 19ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, சிதம்பரத்தின் நிலை போல எதிர்க்கட்சித் தலைவருக்கும் நேரும் என்று ஸ்டாலினைக் குறிப்பிட்டு பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியிருந்தார்.

இந்த நிலையில் சென்னை ராஜாஜி சாலையில் இன்று (செப்டம்பர் 5) செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “சிதம்பரம் கைதுக்குப் பிறகு மத்திய அரசுக்கு எதிரான மு.க.ஸ்டாலினின் வாய்ஸ் மிகவும் மென்மையாக மாறிவிட்டது. மத்திய அரசை மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்துள்ளாரா? கண்டிப்பாக இருக்காது. அடுத்தது தான்தான் என்பதுபோல அவருக்கு பயம் வந்துவிட்டது. அதனைத் தான் ஹெச்.ராஜாவும் தெரிவித்திருக்கிறார்.அதன் காரணமாகவே நானும் இருக்கிறேன் என்பது போல பேசிவருகிறார். மத்திய அரசை எதிர்த்து நானும் அறிக்கை விட்டேன் என்பது போல சிறிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.” என்று தெரிவித்தார்.

மேலும், “ மாநில நலன், மக்கள் நலன், நுகர்வோர் நலன் இது மூன்றிலும் திமுகவை விட எங்களுக்கு அக்கறை அதிகம். பொதுவிநியோக திட்டத்தில் எந்தப் பாதிப்பும் இருக்காது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி!


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்தானே அபராதம்: வைரல் வீடியோ!


சிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா


பாஜகவில் ரஜினி கேட்கும் பதவி!


வியாழன், 5 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon