மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

ரஷ்யாவுக்கு 7,000 கோடி கடன் அளித்த மோடி

ரஷ்யாவுக்கு 7,000 கோடி கடன் அளித்த மோடி

ரஷ்யாவின் கிழக்குப் பகுதிகளில் உள்ள நகரங்களின் வளர்ச்சிக்காக இந்தியா 7,000 கோடி ரூபாயை கடனாக அளித்துள்ளது.

ரஷ்யாவில் நடைபெறும் கிழக்கு பொருளாதார கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் மோடி டெல்லியிலிருந்து விமானம் மூலம் நேற்று முன் தினம்(செப்டம்பர் 3) ரஷ்யா புறப்பட்டுச் சென்றார். கிழக்கு பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாடு ரஷ்யாவில் உள்ள விளாதிவோஸ்டக் நகரில் செப்டம்பர் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி பங்கேற்க சென்றார்.

நேற்று(செப்டம்பர் 4) புதினைச் சந்தித்த மோடி இரு நாடுகளுக்கு இடையே ஆன வர்த்தகம், முதலீடு, தொழில்துறை, ராணுவம், பாதுகாப்பு, தொழில்நுட்பம், கல்வி, கலாச்சாரம் உள்ளிட்டவை அடங்கிய, இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் முடிவாகியுள்ளன. அதில் முக்கியமான ஒப்பந்தமாக ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள விளாடிவோஸ்டாக் பகுதியில் இருந்து சென்னைக்கு கடல் போக்குவரத்து தொடங்க ஒப்பந்தமானது.

இன்று(செப்டம்பர் 5) விளாதிவோஸ்டோக் நகரில் நடந்த கிழக்கு மண்டலப் பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி, மலேசியப் பிரதமர் மகாதிர் முகமதுவை சந்தித்தார். அதன் பின்னர் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவை சந்தித்து பொருளாதாரம், பாதுகாப்புத் துறைகள், 5 ஜி என பன்முக உறவுகள் பற்றி இரு தலைவர்களும் விவாதித்தனர்.

அதனைத் தொடர்ந்து மாநாட்டில் பேசிய மோடி, “வளங்கள் நிறைந்த கிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சியில், ரஷ்யாவுடன் தோளோடு தோளாக இந்தியா இருக்கும். மத்திய அரசின் 'கிழக்கு நோக்கி' கொள்கையின் அடிப்படையில் ரஷ்யாவின் தூர கிழக்கு பகுதிகளில் உள்ள நகரங்களின் வளர்ச்சிக்காக 7,000 கோடி கடன் அளிக்கப்படும். எங்கள் பொருளாதார ராஜ தந்திரத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கும். நட்பு நாடுகளின் பல்வேறு பிராந்தியங்களின் வளர்ச்சியில் இந்தியா தீவிரமாக பங்கேற்கும்” எனக் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் பகுதியுடன் பொருளாதார ரீதியாக உறவு கொள்ளும் முதல் நாடு இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி!


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்தானே அபராதம்: வைரல் வீடியோ!


சிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா


பாஜகவில் ரஜினி கேட்கும் பதவி!


வியாழன், 5 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon