மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

ஐஎன்எக்ஸ்: மீண்டும் கைதாகும் சிதம்பரம்

ஐஎன்எக்ஸ்: மீண்டும் கைதாகும் சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா பண மோசடி விவகாரத்தில் சிபிஐ தொடுத்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத் துறை வழக்கில் முன்ஜாமீன் வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 5) கைவிரித்துவிட்டது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு, தற்போது வரை சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தது. இவ்வழக்கில் தனக்கு முன்ஜாமீன் அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடினார் சிதம்பரம்.

இந்த வழக்கு நீதிபதிகள் பானுமதி, போபன்னா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, “சிதம்பரத்திற்கு இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கினால், விஜய் மல்லையா, நீரவ் மோடி, ஜாகிர் நாயக் உள்ளிட்டோரின் வங்கி மோசடி வழக்குகளுக்கு அது பாதகமாகும்” என்று அமலாக்கத் துறை தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த நிலையில் சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய பானுமதி, போபன்னா அமர்வு, “ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்திற்கு எதிரான விசாரணை சரியான திசையில் செல்கிறது. விசாரணை அமைப்புகளுக்கு சிதம்பரம் போதுமான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முன் ஜாமீன் என்பது அடிப்படை உரிமை அல்ல. இது முன் ஜாமீன் வழங்குவதற்கு பொருத்தமான வழக்கும் அல்ல. ஆரம்பத்திலேயே முன் ஜாமீன் வழங்குவது வழக்கு விசாரணையில் தடையை ஏற்படுத்தும்” என்று கருத்து தெரிவித்தனர். மேலும், சிதம்பரத்தின் முன் ஜாமீன் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டனர்.

சிதம்பரத்தின் மீதான சிபிஐ காவல் இன்றுடன் முடியும் நிலையில், அவர் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி!


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்தானே அபராதம்: வைரல் வீடியோ!


கமலைக் குறிவைக்கிறாரா மதுமிதா?


சிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா


வியாழன், 5 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon