மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

அரசு நூலகங்களில் கலைஞர் பற்றிய நூல்!

அரசு நூலகங்களில் கலைஞர்  பற்றிய நூல்!

மறைந்த திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் பற்றிய நூல் தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து அரசு நூலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி தொகுதி எம்.பி.யான கனிமொழி, இந்த நூலை நூலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தி இந்து குழுமத்தின் 'ஃபிரண்ட் லைன்' இதழ் மறைந்த கலைஞரின் வாழ்நாள் சாதனைகள் குறித்து, ‘ஒரு மனிதன், ஒரு இயக்கம்’ என்ற நூலை கடந்த ஆகஸ்டு 6 ஆம் தேதி வெளியிட்டது. கலைஞரின் பொதுவாழ்வில் அவர் ஆற்றிய சேவைகள், கலைஞர் பற்றி அரிய தகவல்கள் அடங்கிய இந்த நூலை தன் சொந்த செலவில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் 110 அரசு நூலகங்களுக்கும் அன்பளிப்பு என்ற முறையில் அனுப்பி வைத்திருக்கிறார் கனிமொழி.

கலைஞர் பற்றிய நூலாக இருந்தாலும் அரசு நூலகங்களில் இந்நூல் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. தங்கள் செலவில் அன்பளிப்பு என்ற பதிவின்படி யார் வேண்டுமானாலும் புத்தகங்களை அரசு நூலகங்களுக்கு வழங்கலாம் என்கிறார்கள் நூலகத் துறை அதிகாரிகள். அரசு தன் செலவில் வாங்க வேண்டும் என்று கேட்டால்தான் மறுப்போ, காலதாமதமோ நடக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

இதேபோல அனைத்து மாவட்ட நூலகங்களில் இந்நூலை கொண்டு சேர்க்க முயற்சிகள் திமுக வட்டாரங்களில் நடக்கின்றன.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி!


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்தானே அபராதம்: வைரல் வீடியோ!


கமலைக் குறிவைக்கிறாரா மதுமிதா?


சிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா


வியாழன், 5 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon