மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

காப்பான் வியாபாரம் தாமதம் ஏன்?

காப்பான் வியாபாரம் தாமதம் ஏன்?

சூர்யா நடிக்கும் படங்களின் வியாபாரம் பெரும்பாலும் படம் தொடங்கும்போதே இறுதி செய்யப்பட்டுவிடும். ஆனால் காப்பான் படத்தின் வியாபாரமோ ரிலீஸுக்கு இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில் முடிவடையாமல் உள்ளது.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள மெகா பட்ஜெட் படம் காப்பான். செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

படத்தின் வியாபாரம் இறுதிகட்டத்தை எட்டாமல் இழுபறியில் உள்ளநிலையில் அதற்கான காரணம் குறித்து திரைத்துறை வட்டாரங்களில் விசாரித்தோம். அதற்கு படத்தை தயாரித்த லைகா நிறுவனம் தான் காரணம் என்கிறார்கள்.

அந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான ரஜினியின் 2.0 படம் தமிழகத்தில் விநியோக அடிப்படையில் வியாபாரம் செய்யப்பட்டது. 2.0படத்தை கேரளாவில் விநியோகம் செய்த டோமிசன் முளகுபாடம் என்பவர் ‘காப்பான்’ படத்துக்கு எதிராக கேரள விநியோகஸ்தர் சங்கத்தில் புகார்மனு அளித்தார்.

அந்த மனுவில், “கேரளாவில் 2.0 படத்தை திரையிட்டதில் எனக்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அதை ஈடுகட்ட காப்பான் படத்தின் கேரள விநியோக உரிமையை குறைந்த விலைக்கு எனக்கு தரவேண்டும். ஆனால் வேறு ஒருவருக்கு அந்த உரிமையை கொடுத்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.

அதுபோலவே தமிழகத்திலும் பல விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். எல்லோருமே விலை குறைவாகக் கேட்பதால், தயாரிப்பு நிறுவனம் சார்பில், “2.0வில் உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை நாங்கள் கொடுத்துவிடுகிறோம். அதற்காக காப்பான் படத்தைக் குறைந்த விலைக்குத் தரமாட்டோம். வேண்டுமானால் காப்பான் படத்துக்கு என்ன விலையோ? அதைத் தருவதாக இருந்தால் உங்களுக்கே தருகிறோம்” என்று சொல்கிறார்களாம்.

விநியோகஸ்தர்களோ, “ஒரு பகுதியில் அதிகபட்சம் ஐந்து கோடிக்கு இந்தப்படம் போகும் என்றால் இவர்கள் வேண்டுமென்றே ஆறு, ஏழு கோடி என்று விலை சொல்கிறார்கள். அவ்வளவு விலை கொடுத்து வாங்கினால் நஷ்டமாகிவிடும்” என்கிறார்கள்.

இந்தச் சிக்கல் முடிவின்றித் தொடர்வதால் இன்றுவரை அப்படத்தின் வியாபாரம் இறுதியாகவில்லை என்று கூறப்படுகிறது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி!


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்தானே அபராதம்: வைரல் வீடியோ!


கமலைக் குறிவைக்கிறாரா மதுமிதா?


சிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா


வியாழன், 5 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon