மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 18 ஜன 2021

காஷ்மீர்: தாயைப் பார்க்க உச்ச நீதிமன்றம் சென்று வென்ற மகள்!

காஷ்மீர்: தாயைப் பார்க்க உச்ச நீதிமன்றம் சென்று வென்ற மகள்!

ஒரு மாதத்துக்கும் மேலாக காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும் முன்னாள் காஷ்மீர் முதல்வருமான மெகபூபாவை சந்திக்க, அவரது மகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்திருக்கிறது. ஆகஸ்டு 4 நள்ளிரவு முதல் காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

தன் தாயை காண முடியாமல் தவிப்பது பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, மெகபூபாவின் மகள் இல்திஜா முப்தி கடந்த ஆகஸ்டு 15 ஆம் தேதி நீண்டதொரு கடிதம் எழுதியிருந்தார். உலகம் முழுதும் பேசப்பட்ட இந்த கடிதம் பற்றி அமித் ஷா எதுவும் பேசாத நிலையில், தன் தாயைப் பார்க்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்துக்கு சென்றார் டெல்லியில் இருக்கும் இல்திஜா முப்தி.

“நான் என் தாயைப் பார்த்து ஒரு மாதம் ஆகிறது. என் தாயை சந்திக்க எனக்கு எது தடையாக இருக்க முடியும்? எனவே நான் ஸ்ரீநகர் என்று என் தாய் மெகபூபாவை தனிப்பட்ட முறையில் சந்திக்க அனுமதிக்க வேண்டும்” என்று இல்திஜா தாக்கல் செய்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷா மேத்தா ஆஜரானார். அப்போது அவரிடம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “ஒரு பெண் தன் தாயை சந்திக்க செல்லும்போது நீங்கள் குறுக்கே நிற்பீர்களா?” என்று கேட்டார். அதற்கு மத்திய அரசின் வழக்கறிஞர், “இல்லை... நாங்கள் நிற்கமாட்டோம்” என்று தெரிவித்தார்.

அப்போது இல்திஜா தரப்பில் நீதிமன்றத்தில், “நான் என் தாயாரை சந்திக்க மத்திய அரசால் இதுவரை அனுமதிக்கப்படவே இல்லை. எனக்கு சென்னை செல்ல அனுமதி அளிக்கிறார்கள். ஆனால் ஸ்ரீகர் செல்ல அனுமதி மறுக்கிறார்கள். நான் ஸ்ரீநகர் சென்று என் தாயாரை தனிப்பட்ட முறையில் சந்திக்க விரும்புகிறேன். ஸ்ரீநகரை சுற்றிப் பார்க்கவும் எனக்கு அனுமதிக்க வேண்டும் ” என்று கூறப்பட்டது.

அரசுத் தரப்பில், “தன் தாயாரை சந்திக்குமாறு மாவட்ட நீதிமன்றத்தை இல்திஜா அணுகலாம். அங்கே அனுமதி வழங்கப்படும். அதற்காக உச்ச நீதிமன்றத்துக்கு வரவேண்டியதில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, “இங்கே வருவது ஒவ்வொரு குடிமகனின் உரிமை” என்று பதிலளித்தார்.

மேலும், “இல்திஜா தன் தாயாரை சந்திக்க அனுமதிக்கிறோம். அதேநேரம் ஸ்ரீநகரில் அவர் வலம் வருவதற்கு அங்குள்ள சூழலைப் பொறுத்து அதிகாரிகள் முடிவெடுப்பார்கள்” என்று தெரிவித்தார் தலைமை நீதிபதி.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி!


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்தானே அபராதம்: வைரல் வீடியோ!


கமலைக் குறிவைக்கிறாரா மதுமிதா?


சிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா


வியாழன், 5 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon