ஆக்ஷன் மோடில் தனுஷ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நேற்று தொடங்கியது.
இந்தக் கூட்டணி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே அமைந்து படம் உருவாக்குவதாகக் கூறப்பட்டது. ஆனால், தொடர்ந்து இருவரும் மற்ற படங்களில் ஒப்பந்தமானதால் தற்போதே சாத்தியமாகியிருக்கிறது.
மலையாளத்தில் கவனம் பெற்ற நடிகையான ஐஸ்வர்யா லெக்ஷ்மி இந்தப் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் உலகப் புகழ்பெற்ற நடிகரான அல் பசீனோவை நடிக்கவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அது கைகூடாத நிலையில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒப்பந்தமாகியுள்ளார்.
கேங்ஸ்டர் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படம் லண்டனைக் களமாகக்கொண்டு தயாராகிறது. நேற்று பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் 40 நாள்களுக்குள் ஒரேகட்டமாகப் படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.
மேலும் படிக்க
தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்
டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ
தினகரன் -ஸ்டாலின் பப்பீஸ் டீல் : அதிமுகவின் தேர்தல் திட்டம்!!
‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி