மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 5 செப் 2019

தமிழிசை வழக்கு: கனிமொழிக்கு நோட்டீஸ்!

தமிழிசை வழக்கு: கனிமொழிக்கு நோட்டீஸ்!

தூத்துக்குடியில் கனிமொழி வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் தமிழிசை தாக்கல் செய்த மனுவுக்குப் பதிலளிக்க, கனிமொழிக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 5) உத்தரவிட்டுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் திமுக சார்பில் போட்டியிட்டு, கனிமொழி வெற்றி பெற்றார். கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தூத்துக்குடி தொகுதி வாக்காளர் சந்தான குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று (செப்டம்பர் 4) விசாரணைக்கு வந்த போது, இதுகுறித்து தேர்தல் ஆணையமும், கனிமொழியும் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில் கனிமொழி வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், ”கனிமொழி தாக்கல் செய்த வேட்புமனுவில் ஏராளமான குறைபாடுகள் உள்ளது, முறையற்ற வகையில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது இதுகுறித்து ஆட்சேபங்கள் தெரிவித்தபோது தூத்துக்குடி தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டார்” என்று தமிழிசை குற்றம்சாட்டியிருந்தார்.

”கனிமொழியின் கணவர் மற்றும் மகன் சிங்கப்பூர் குடிமகன்கள். அவர்கள் வருமான விவரங்கள் பொருந்தாது என்று குறிப்பிட்டிருக்கிறார். அப்படியானால் கனிமொழி சிங்கப்பூர் அரசு வழங்கிய குடிமக்கள் சான்றிதழ்களை இணைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் இணைக்க வில்லை. அவருடைய வேட்பு மனு குறைபாடுடையது. எனவே அவரது வெற்றியைச் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.

மேலும், தேர்தல் சமயத்தில் பிரச்சாரத்தின் போது, ஆரத்தி எடுத்த பெண்களுக்குக் கனிமொழி ரூ.2000 வழங்கியதாகவும் மனுவில் குற்றம்சாட்டியிருந்தார். இந்த மனு நீதிபதி, எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழிசை மனுவுக்குப் பதிலளிக்கும்படி கனிமொழி மற்றும் தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி வழக்கைச் செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்,


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி!


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்தானே அபராதம்: வைரல் வீடியோ!


கமலைக் குறிவைக்கிறாரா மதுமிதா?


சிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா


வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

வியாழன் 5 செப் 2019