மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 19 ஜன 2021

ஜெயம் ரவிக்கு சண்டை கற்றுக் கொடுக்கும் ஹாலிவுட் கலைஞர்!

ஜெயம் ரவிக்கு சண்டை கற்றுக் கொடுக்கும் ஹாலிவுட் கலைஞர்!

ஜெயம் ரவி நடிக்கும் ஜன கன மன படத்தில் தமிழ்த் திரைத்துறையைச் சேர்ந்த கலைஞர்களுக்கு நிகராக வெளிநாட்டு கலைஞர்களும் இணைந்து வருகின்றனர்.

என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்களை இயக்கிய அகமத் இயக்கத்தில் தனது 26ஆவது படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். தப்ஸி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அஸர்பைஜானில் நடைபெற்றுவருகிறது.

ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் ஈரானிய நடிகை எல்நாஸ் நொரோஷி சமீபத்தில் இணைந்தார். தற்போது ஹாலிவுட் படங்களுக்கு சண்டைக் காட்சிகளை வடிவமைக்கும் கிளென் போஸ்வெல் படக்குழுவில் இணைந்துள்ளார். கோஸ்ட் ரைடர், மேட்ரிக்ஸ், எக்ஸ் - மேன் ஆர்ஜின்ஸ்: வோல்வெரின் அண்ட் ஹோபிட் ஆகிய படங்கள் இவரது சண்டைக் காட்சிகளுக்காக பேசப்பட்டது. பாலிவுட்டில் மொகஞ்சதாரோ, தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் ஆகிய படங்களிலும் பணியாற்றினார்.

இந்தப் படத்தில் ஜெயம் ரவி ராணுவ அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. ரஹ்மான், எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கேஜிஎஃப் மூலம் பிரபலமான ராமசந்திர ராஜு வில்லனாக நடிக்கிறார். மாடலும் நடிகையுமான டயானா எரப்பாவும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி!


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்தானே அபராதம்: வைரல் வீடியோ!


கமலைக் குறிவைக்கிறாரா மதுமிதா?


சிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா


வியாழன், 5 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon