மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

வெளிநாடுகளில் அமைச்சர்கள்!

வெளிநாடுகளில் அமைச்சர்கள்!

அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுமுறை பயணமாக கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்றார். லண்டனில் அவருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் உடனிருந்தார். லண்டன் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்ட முதல்வர் அங்கிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குச் சென்றார். அங்கு அவருடன் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி, எம்.சி.சம்பத் ஆகியோர் உடனுள்ளனர்.

இதேபோல பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனும், கல்வியில் முதலிடத்தில் விளங்கும் பின்லாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள கல்வி நிறுவனங்களை பார்வையிட்டுள்ளார்.அரசு முறைப் பயணமாக இந்தோனேஷியா சென்றுள்ள வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று வன உயிரின பூங்காக்கள், சரணாலயங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிடுகிறார். மேலும், காட்டுத் தீயை தடுக்கும் முறைகள் குறித்தும் அறிந்துவரவுள்ளார்.

இதேபோல தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில், ரஷ்யாவில் நடைபெற சர்வதேச வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு கண்காட்சி மற்றும் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பினார். செய்தி மற்றும் விளம்பரத் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மொரிஷியஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழக அமைச்சர்கள் பலரும் வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். தமிழக கேபினெட்டே வெளிநாட்டில் உள்ளது. தமிழக அமைச்சரவையை சுற்றுலா அமைச்சரவை என்றுதான் சொல்ல வேண்டும்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் அமைச்சர் சி.வி.சண்முகம் தனிப்பட்ட பயணமாக இன்று (செப்டம்பர் 5) சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார். சண்முகத்தின் அண்ணன் மகன் விபத்தில் சிக்கி காயமடைந்து தற்போது சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை சந்தித்து நலம் விசாரிக்கவே சி.வி.சண்முகம் சிங்கப்பூர் சென்றுள்ளார். இதேபோல உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனும் சிங்கப்பூர் சென்றுள்ளார். தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் துபாய் வழியாக எகிப்து புறப்பட்டுச் செல்கிறார். இவர் குடும்பத்துடன் தனிப்பட்ட பயணமாகவே வெளிநாடு செல்கிறார் என்று கூறப்படுகிறது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி!


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்தானே அபராதம்: வைரல் வீடியோ!


கமலைக் குறிவைக்கிறாரா மதுமிதா?


சிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா


வியாழன், 5 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon