மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 5 செப் 2019

சிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா

சிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா

ப.சிதம்பரத்தின் நிலை போன்று எதிர்க்கட்சித் தலைவருக்கும் நேரிடும் என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஐந்தாவது முறையாக சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டு டெல்லியிலுள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளார். இன்றுடன் அவரது சிபிஐ காவல் முடிகிறது. அதேசமயம் சிதம்பரம் சம்பந்தப்பட்ட ஐ.என்.எக்ஸ் மீடியா, ஏர்செல்-மேக்சிஸ் வழக்குகளும் இன்று விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் சேலத்தில் நேற்று (செப்டம்பர் 4) செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, “சிதம்பரம் மிகப்பெரிய ஊழல்வாதி என்பதைக் கடந்த 25 வருடங்களாக சிவகங்கை முழுவதும் கூறிவருகிறேன். ஏனெனில், அவரைப் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியும். காங்கிரஸ் தலைவர்களை கைது செய்தால்கூட அக்கட்சி எதிர்க்கக் கூடாது. ஏனெனில், அவர்கள் ஜனநாயக விரோதிகள். உப்பு தின்றால் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். ஊழல் செய்தால் ஜெயிலுக்குத்தான் செல்ல வேண்டும். ஆனால், சிதம்பரம் திகார் சிறைக்குச் செல்ல மறுக்கிறாராம். ப.சிதம்பரத்துக்கு நடந்தது போல எதிர்க்கட்சித் தலைவருக்கும் இதே நிலை ஏற்படும்” என்று தெரிவித்தார்.

யார் அந்த எதிர்க்கட்சித் தலைவர் என்று கேள்வி எழுப்ப, “காங்கிரஸ் கூடத்தான் எதிர்க்கட்சி” என்று சொல்லி பேட்டியை முடித்துக்கொண்டு கிளம்பினார். இருப்பினும் அவர் திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை மனத்தில் வைத்தே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்கிறார்கள் பாஜகவினர்.

கடந்த ஆகஸ்ட் 31ஆம் டிஜிட்டல் திண்ணையில், “ஸ்டாலினை வீழ்த்த ரஜினியைத் தயார் செய்வது ஒருபக்கம் என்றால், இன்னொருபக்கம் ஸ்டாலினின் இமேஜை வீழ்த்த அவரை கைது செய்ய வேண்டும் என்பதும் டெல்லியின் திட்டம் என்கிறார்கள் டெல்லி வாலாக்கள்” என்று குறிப்பிட்டிருந்தோம்.

மேலும், “அக்டோபரில் ஹரியானா, மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் மாநில தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. அதற்கான வேலைகளில் அமித் ஷா தீவிரமாகிவிட்டார். மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த பின்னால் அமித் ஷாவின் கவனம் திமுக மீது, குறிப்பாக ஸ்டாலின் மீது திரும்பக் கூடும்” என்றும் தெரிவித்திருந்தோம். இந்த நிலையில் பாஜக தேசியச் செயலாளரான ஹெச்.ராஜா இவ்வாறாகக் கருத்து தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ


தினகரன் -ஸ்டாலின் பப்பீஸ் டீல் : அதிமுகவின் தேர்தல் திட்டம்!!


பாஜகவில் ரஜினி கேட்கும் பதவி!


‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி


ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

வியாழன் 5 செப் 2019