மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

கிச்சன் கீர்த்தனா: காலிஃப்ளவர் 65

கிச்சன் கீர்த்தனா: காலிஃப்ளவர் 65

உலகின் அனைத்துப் பகுதி மக்களின் உணவிலும் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும் காலிஃப்ளவரை, பெரும்பாலும் வெள்ளை நிறத்தில்தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், கண்ணை பறிக்கும் பல வண்ணங்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட வகைகளில் அது பயிராகிறது. அமெரிக்கர்களால் அதிகமாக உட்கொள்ளப்படும் காலிஃப்ளவர் விவசாயத்தில் இன்று முதலிடம் வகிப்பது இத்தாலி. காலிஃப்ளவர் விளைச்சலில் இந்தியாவும் முக்கிய இடம் வகிக்கிறது. எல்லா வயதினருக்கும் ஏற்ற காலிஃப்ளவர் 65, மாலை நேர சைடிஷ்களில் குறிப்பிடத்தக்கது.

என்ன தேவை?

காலிஃப்ளவர் - 500 கிராம்

கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 4 டேபிள்ஸ்பூன்

அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்

கடலை மாவு – 4 டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

நறுக்கிய வெங்காயத்தாள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

காலிஃப்ளவரைப் பெரிய துண்டுகளாக நறுக்கிச் சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் அகலமான பாத்திரத்தில் காலிஃப்ளவரைப் போட்டு அதன் மீது (எண்ணெய், வெங்காயத்தாள் நீங்கலாக) மற்ற பொருட்கள் அனைத்தையும் தூவிக் கலக்கவும். அதிக உலர்வாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாகக் கலந்து சிறிது நேரம் ஊறவிடவும். பின்னர் வாணலியில் எண்ணெயைக் காயவைத்து அதில் ஊறவைத்த காலிஃப்ளவரைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். வெங்காயத்தாள் தூவிப் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: காலிஃப்ளவர் தண்டு ஊறுகாய்


மேலும் படிக்க


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ


தினகரன் -ஸ்டாலின் பப்பீஸ் டீல் : அதிமுகவின் தேர்தல் திட்டம்!!


பாஜகவில் ரஜினி கேட்கும் பதவி!


‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி


வியாழன், 5 செப் 2019

chevronLeft iconமுந்தையது