மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

பெரியார் சிலையின் கீழ் கடவுள் இல்லை வாசகம்: வழக்கு தள்ளுபடி!

பெரியார் சிலையின் கீழ் கடவுள் இல்லை வாசகம்: வழக்கு தள்ளுபடி!

பெரியார் சிலையின் கீழ் கடவுள் இல்லை என்ற வாசகத்தை நீக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (செப்டம்பர் 4) தள்ளுபடி செய்துள்ளது,

சென்னையைச் சேர்ந்த தெய்வநாயகம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பெரியார் சிலைகளின் கீழ் கடவுள் இல்லை, கடவுளை வணங்குபவர் காட்டுமிராண்டி, முட்டாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பெரியார் எப்போதும் இவ்வாறு கூறியதில்லை. எனவே, இதுபோன்ற வாசகங்களை நீக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சார்பில் இந்த வழக்கு குறித்து பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பெரியார் உயிருடன் இருக்கும்போதே தனக்குத் தானே சிலை வைத்து, இதுபோன்ற வாசகங்கள் பொறித்த பல கல்வெட்டுகளையும் அவரே திறந்து வைத்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அதற்கான ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை கி.வீரமணி சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். அப்போது, பெரியார் சிலையில் இருக்கும் வாசகங்களை நீக்க முடியாது என்றும், அதற்கான ஆதாரங்கள் எதிர் மனுதாரர் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டதால் இந்த வழக்கில் எந்த ஓர் உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ


தினகரன் -ஸ்டாலின் பப்பீஸ் டீல் : அதிமுகவின் தேர்தல் திட்டம்!!


பாஜகவில் ரஜினி கேட்கும் பதவி!


‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி


வியாழன், 5 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon