மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

ஹாங்காங்: பாய்ச்சப்படும் நீல நிற தண்ணீர்!

ஹாங்காங்: பாய்ச்சப்படும் நீல நிற தண்ணீர்!

தொடர்ந்து 13ஆவது வாரமாக நடந்து வரும் ஹாங்காங் போராட்டத்தில், போலீசார் போராட்டக்காரர்களை கைது செய்து மக்கள்மீது வன்முறையை பிரயோகித்து வருகின்றனர்.

ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவை எதிர்த்து ஜனநாயக ஆதரவுக் குழுவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எனப் பல தரப்பினரும் கைகோத்ததால் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தொடர்ந்து 13ஆவது வாரமாக, பெரும்பாலும் அமைதியான முறையில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டம் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் போலீசாரின் வன்முறை அடக்குமுறையால் திசை மாறத் தொடங்கியது.

போராட்டக்காரர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தின் மீது சென்ற வாரம் பெட்ரோல் குண்டு வீசியதால் பதற்றம் உருவானது. ஆகஸ்ட் 28ஆம் தேதி, ஹாங்காங் போராட்டங்களில் முன்னணியில் இருந்து செயல்பட்ட ஜனநாயக ஆதரவாளர் ஆன்டி சான் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் சமூகச் செயற்பாட்டாளர் ஜோஷ்வா வாங் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்தனர். இதுவரை ஹாங்காங் போராட்டக் கலவரங்களில் 800 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது நடவடிக்கைக்குப் பின் போராட்டக்காரர்களை ஹாங்காங் போலீசார் கடுமையாக தாக்கி வருகின்றனர். ரயில் நிலையங்கள், சாலைகள் எனப் போராட்டக்காரர்கள் எங்கு கூடினாலும் கடுமையாகத் தாக்கப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நேற்று (செப்டம்பர் 3) ஹாங்காங் தெருக்களில் இறங்கி போராடிய போராட்டக்காரர்கள் மீது நீல நிற தண்ணீர் பீரங்கி பாய்ச்சப்பட்டது. தடியடி நடத்தும்போது, தப்பி ஓடும் போராட்டக்காரர்களை அடையாளப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் போராட்டம் வலுக்கும் நிலையில், நிர்வாக இயக்குநர் கேரி லேம் தனது பதவியிலிருந்து விலகுமாறு குரல்கள் வலுத்துக் கொண்டிருக்கின்றன. இதற்குப் பதில் அளித்த அவர், “நான் ராஜினாமா செய்வது குறித்து சீன அரசுடன் இதுவரை பேசவில்லை. ராஜினாமா செய்வது என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். கடந்த மூன்று மாதங்களாக எனக்குள் கூறிக்கொண்டு இருக்கிறேன். நானும் எனது குழுவும் ஹாங்காங்கிற்கு உதவுவதற்காகப் பதவியில் இருக்க வேண்டும். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து ஹாங்காங்கை மீட்டு வழி நடத்த முடியும் என்று நானும் எனது நிர்வாகத்தில் உள்ளவர்களும் நம்பிக்கை கொண்டுள்ளோம். நிச்சயம் ஹாங்காங்கை பழைய நிலைக்குக் கொண்டு வருவோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஹாங்காங் போராட்டத்தில் சீனாவுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது வட கொரியா ஆதரவு அளித்திருக்கிறது.


மேலும் படிக்க


தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!


டிஜிட்டல் திண்ணை: திமுக புள்ளிகளுக்கு பாஜக வலை!


பிக் பாஸ் 3: கவின் காலி செய்த பிக் பாஸ் ஸ்கிரிப்ட்!


அதிகாரம் - அறநெறி: சமகாலத்தின் இரு சாட்சிகள்!


5%: கஸ்டடியில் இருந்து மோடியை கலாய்த்த ப.சி


புதன், 4 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon