மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

அவதூறு வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

அவதூறு வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராக முதல்வர், அமைச்சர்கள் சார்பில் அவதூறு வழக்கு தொடர அரசு வழக்கறிஞர்களுக்கு அதிகாரம் உள்ளதா என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (செப்டம்பர் 3) கேள்வி எழுப்பியிருக்கிறது.

பிரச்சாரம், பொதுக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றில் பேசும்போது அரசியல் கட்சித் தலைவர்கள், முதல்வர், அமைச்சர்களை விமர்சித்துப் பேசுகின்றனர். இவ்வாறு விமர்சித்துப் பேசுவதாக அவர்கள்மீது மாவட்ட நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள் தொடரப்படுகின்றன. திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் மீது பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி, அவதூறு வழக்குகளைச் சந்தித்து வருபவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் அமைச்சர்கள் என்ற முறையில் இல்லாமல் தனிப்பட்ட முறையில் விமர்சித்ததற்காக, அரசுத் தரப்பில் வழக்கு தொடர அரசு குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஆதிகேசவலு முன்பு நேற்று (செப்டம்பர் 3) விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல்வர், அமைச்சர்கள் சார்பில் அவதூறு வழக்குகளைத் தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞருக்கு அதிகாரம் உள்ளதா, இல்லையா என்பது குறித்து தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


மேலும் படிக்க


தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!


டிஜிட்டல் திண்ணை: திமுக புள்ளிகளுக்கு பாஜக வலை!


பிக் பாஸ் 3: கவின் காலி செய்த பிக் பாஸ் ஸ்கிரிப்ட்!


அதிகாரம் - அறநெறி: சமகாலத்தின் இரு சாட்சிகள்!


5%: கஸ்டடியில் இருந்து மோடியை கலாய்த்த ப.சி


புதன், 4 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon