மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 9 ஜூலை 2020

மாருதி சுஸுகி: வேலையிழக்கும் ஊழியர்கள்!

மாருதி சுஸுகி: வேலையிழக்கும் ஊழியர்கள்!

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனம் இந்த மாதம் இரண்டு நாள்களை வேலையில்லா நாள்களாக அறிவித்துள்ளது.

மோட்டார் வாகன உற்பத்தித் துறை வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் பல நிறுவனங்கள் தங்கள் வேலைநாள்களை குறைத்துவருகின்றன.

ஹீரோ, டிவிஎஸ் லூகாஸ், மகேந்திரா & மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், டொயோட்டா கிர்லோஸ்கர், அசோக் லெய்லேண்ட், போஸ்ச், ஜம்மா, வாப்கோ உள்ளிட்ட நிறுவனங்கள் விற்பனை வீழ்ச்சியின் காரணமாக தங்கள் வேலை நாள்களை குறைத்தன. அதன் தொடர்ச்சியாக மாருதி சுஸுகி நிறுவனம் குருகிராம், மானேஸர் ஆகிய இரு இடங்களில் உள்ள தொழிற்கூடங்களில் செப்டம்பர் 7, 9 ஆகிய இரண்டு நாள்கள் வேலையில்லா நாள்களாக அறிவித்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் தலைவர் ஆர்சி பார்கவா, விற்பனை வீழ்ச்சியின் காரணமாக 3000 ஒப்பந்த தொழிலாளர்களின் ஒப்பந்தத்தை தொடரமுடியாது என ஆகஸ்ட் மாதம் அறிவித்தார். மேலும் மானேஸர் தொழிற்கூடத்தில் மட்டும் 350 தொழிலாளர்களின் வேலை பறிபோனது.

ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து மாருதி கார் விற்பனை சரிந்து வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் 35.86 சதவீதம் சரிந்துள்ளதாக அந்நிறுவனத்தின் மாதாந்திர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டீலர்களிடம் கார்கள் விற்காமல் தேங்கிவருவதால் உற்பத்தியை குறைக்க இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பங்குகளும் தொடர்ந்து குறைந்துவருகின்றன.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ


தினகரன் -ஸ்டாலின் பப்பீஸ் டீல் : அதிமுகவின் தேர்தல் திட்டம்!!


‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி


தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!


சிதம்பரத்தைத் தொடர்ந்து சிவக்குமார் கைது!


புதன், 4 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon