மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 7 ஆக 2020

நம்ம வீட்டுப் பிள்ளை: கடிவாளம் போட்ட சன் பிக்சர்ஸ்!

நம்ம வீட்டுப் பிள்ளை: கடிவாளம் போட்ட சன் பிக்சர்ஸ்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் நம்ம வீட்டுப் பிள்ளை.

செப்டம்பர் 27 அன்று இப்படம் வெளியாகும் என்று விநியோகஸ்தர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு நேற்று இராமேஸ்வரத்தில் தொடங்கியிருக்கிறது. மூன்று அல்லது நான்கு நாட்களில் அது நிறைவு பெறும் என்றும் அதோடு படப்பிடிப்பு மொத்தமாக நிறைவடையும் என்றும் சொல்கிறார்கள்.

இப்பாடல் காட்சியைப் படமாக்க இயக்குநர் பாண்டிராஜ் தேர்வு செய்து வைத்திருந்த இடம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலைவனப் பகுதி. நம்ம வீட்டு பிள்ளை படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்புச் செலவில் இயக்குநர்களுக்கு நெருக்கடி கொடுப்பதில்லை. அதேநேரம் அந்த செலவு நியாயம் தானா என்கிற கேள்வியை இயக்குநர்களிடம் கேட்கத் தவறுவதில்லை.

ராஜஸ்தானில் படப்பிடிப்பு நடத்தினால் ஆகக் கூடிய செலவுக் கணக்கைப் பார்த்துவிட்டு, இதற்காக இவ்வளவு தொகை செலவிடுவது தேவைதானா அதேபோன்ற லொகேஷன் தமிழகத்தில் இருக்கும்பொழுது எதற்காக 3 நிமிடம் இடம்பெறக்கூடிய பாடல் காட்சிக்காக ராஜஸ்தான் செல்ல வேண்டும் என்ற கேள்வியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இயக்குநரிடம் கேட்டுள்ளார்கள்.

தயாரிப்பு நிறுவனத்தின் நியாயமான கேள்வியை புரிந்து கொண்ட இயக்குநர் ராஜஸ்தான் பாலைவன மணல் பகுதியில் எடுக்க வேண்டிய பாடல் காட்சியை ராமேஸ்வரம் கடற்கரை மணல் பகுதிக்கு மாற்றியதால் படத்தயாரிப்பில் பல லட்ச ரூபாய் செலவு குறைக்கப்பட்டுள்ளது. எல்லாப் பெரிய படங்களின் தயாரிப்பாளர்களும் இதைக் கடைபிடித்தால் நல்லது என்கிறார்கள் திரையுலகினர்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ


தினகரன் -ஸ்டாலின் பப்பீஸ் டீல் : அதிமுகவின் தேர்தல் திட்டம்!!


‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி


தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!


சிதம்பரத்தைத் தொடர்ந்து சிவக்குமார் கைது!


புதன், 4 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon