மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 4 டிச 2020

பாஜகவில் ரஜினி கேட்கும் பதவி!

பாஜகவில் ரஜினி கேட்கும் பதவி!

பாஜகவில் சேரும் முடிவை ரஜினி எடுக்கமாட்டார் என்று திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜக தமிழக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து, தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி பாஜக வட்டாரங்களில் மட்டுமல்லாமல் அரசியல் அரங்கத்திலும் எதிரொலித்து வருகிறது. இதற்கிடையே, பாஜகவுக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகர் ரஜினிகாந்தை தலைவராக நியமிக்க முடிவுசெய்து, அவருக்கு பாஜக தரப்பிலிருந்து அழுத்தம் தரப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று (செப்டம்பர் 4) செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரிடம், இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவரோ, “எனக்குத் தெரிந்தவரை நண்பர் ரஜினிகாந்த் பாஜகவில் உறுப்பினராக இல்லை. ஒரு கட்சியில் உறுப்பினராக இல்லாதவர் பாஜகவுக்கு எப்படி தலைவராக முடியும். தலைவராக நியமிக்க ஒரு ஆள் கூட இல்லாத அளவுக்கா தமிழக பாஜக உள்ளது. ரஜினிகாந்தை விட்டுவிட்டு தலைவர் பதவியில் நியமிக்க பாஜகவில் ஆளே இல்லையா? ரஜினிகாந்த் பாஜகவில் இணைவதாக இருந்தால் தேசியத் தலைவர் பதவி கேட்பாரே தவிர தமிழ்நாட்டு தலைவராகவெல்லாம் ஆகமாட்டார். ஏன் அகில இந்திய தலைவராக நியமித்தால் கூட ஏற்றுக்கொள்வாரா என்று தெரியவில்லை” என்று கிண்டலாக பதிலளித்துவிட்டுச் சென்றார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ


தினகரன் -ஸ்டாலின் பப்பீஸ் டீல் : அதிமுகவின் தேர்தல் திட்டம்!!


‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி


தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!


சிதம்பரத்தைத் தொடர்ந்து சிவக்குமார் கைது!


புதன், 4 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon