மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 1 டிச 2020

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தீ விபத்து!

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தீ விபத்து!

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை பிளாஸ்டிக் சர்ஜரி வார்டில் இன்று (செப்டம்பர் 4) மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 26க்கும் மேற்பட்ட மருத்துவ சிகிச்சைப் பிரிவுகள் உள்ளன. 277 வார்டில் பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்ததால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர். பின்னர் அது தீ விபத்து என்று தெரியவந்ததும் அலறியடித்து அங்கும் இங்கும் ஓடியுள்ளனர். நடக்க முடியாதவர்களை அங்கிருந்த உறவினர்கள் தூக்கிக் கொண்டு ஓடியுள்ளனர். இதுகுறித்து மதுரை தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 277ஆவது வார்டில் இருந்து மற்ற வார்டுகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர். சிறிது நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால்,பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

எனினும் பிளாஸ்டிக் சர்ஜரி வார்டில் இருந்த மருத்துவ பொருட்கள் தீயில் எரிந்துள்ளது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும் உடனடியாக தீ அணைக்கப்பட்டுவிட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இந்த மருத்துவமனையில் மின் துண்டிப்பு காரணமாக மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததே இதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணம் என்று நோயாளிகளின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ


தினகரன் -ஸ்டாலின் பப்பீஸ் டீல் : அதிமுகவின் தேர்தல் திட்டம்!!


‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி


தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!


சிதம்பரத்தைத் தொடர்ந்து சிவக்குமார் கைது!


புதன், 4 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon