மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஜூலை 2020

ஹாங்காங்: சர்சைக்குரிய மசோதா நீக்கம்!

ஹாங்காங்: சர்சைக்குரிய மசோதா நீக்கம்!

குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சர்சைக்குரிய மசோதாவை ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் திரும்பப் பெற்றார்.

13 மாத போராட்டங்களுக்குப் பிறகு சர்ச்சைக்குரிய ஒப்படைப்பு மசோதாவை முறையாக திரும்பப் பெறுவதாக ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லேம் இன்று(செப்டம்பர் 4) அறிவித்துள்ளார்.

ஹாங்காங் போராட்டம்: ஒரு சிறிய அறிமுகம்

ஹாங்காங் - சீனா இடையேயான ஒப்படைப்பு சட்ட மசோதாவுக்கு (Anti- Extradition Bill) எதிராக ஹாங்காங்கில் கடந்த மார்ச் 31ஆம் தேதியிலிருந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என பல தரப்பினரும் கைகோர்த்ததால் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்தது. ஆரம்பத்தில் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டும் போராடிய மக்கள், தீவிர கட்டத்தை போராட்டம் நெருங்கவும் வாரம் முழுவதும் போராட்டத்தில் பங்கெடுத்து அரசின் மீதான தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

10ஆவது வாரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கண்ணீர் புகை குண்டை போலீசார் போராட்டக்காரர்கள் மீது வீச, மோதல் வெடிக்கத் துவங்கியது. மக்கள் ஹாங்காங் விமான நிலையத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.

11 ஆவது வாரத்தில் மட்டும் சுமார் 17லட்சம் மக்கள் ஒன்று திரண்டு மழையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். உலக நாடுகளின் பார்வை ஹாங்காங் போராட்டத்தின் மீது திரும்பியது. பெரும்பாலும் போராட்டக்காரர்கள் அமைதியான முறையிலேயே போராடியது நம்பிக்கையூட்டுவதாக சமூக வலைதலங்களில் ஹாங்காங் மக்களுக்கு உலகெங்கும் ஆதரவு பெருகியது.

அதே சமயம் சீன அரசு இப்போராட்டத்தை முறியடிக்க ஹாங்காங் போலீசுக்கு அழுத்தம் கொடுத்தது. இதனால் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு, ரப்பர் தோட்டாக்கள், பெப்பர் ஸ்பிரேவை பயன்படுத்தத் தொடங்கினர். சீன ராணுவம் ஹாங்காங் எல்லையில் குவிந்தது. நாளுக்கு நாள் மக்கள் மீது போலீசாரின் வன்முறை அதிகரித்துக் கொண்டே இருந்தது.

தொடர்ந்து 13 வாரங்களாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஹாங்காங் அரசின் மீது மக்கள் நம்பிக்கை தகர்ந்தது போல பொருளாதாரம், உட்கட்டமைப்பு, அமைதி ஆகியவையும் சீர்குலைந்தது. மிருகத்தனமான போலீசின் நடவடிக்கை, 1183 போராட்டக்காரர்களை கைது செய்தது ஆகியவை போராட்டக்காரர்களை கொதிப்படைய வைத்தது.

மிகவும் தாமதமான நீதி

இந்நிலையில் சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், “நீடித்த வன்முறை நமது சமூகத்தின் அஸ்திவாரங்களை, குறிப்பாக சட்டத்தின் ஆட்சியை சேதப்படுத்துகிறது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அரசாங்கம் இந்த மசோதாவை முறையாக வாபஸ் பெறும்” என்று கூறினார்.

மேலும் இந்த மாதத்திலிருந்து கேலி லேம் மக்களிடம் நேரடி உரையாடலைத் தொடங்கவுள்ளதாகவும், சமூகத்தில் நிலவும் அதிருப்தியை போக்கும் வகையில் தீர்வுகள் எடுக்கப்படவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

ஆனால், கேரி லேம் இம்முடிவை முன்னரே எடுத்திருக்க வேண்டும் என்று அல்ஜசீரா பத்திரிக்கையாளர் அட்ரைய்ன் பிரவுன் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு தற்போதுள்ள நெருக்கடியில் ஒரு திருப்புமுனையாக இருக்கக்கூடும் எனக் கூறும் பிரவுன், ஆனால் நிலைமையைத் தணிக்க இது போதுமானதாக இருக்குமா என்பது தெரியவில்லை என மேலும் தெரிவித்துள்ளார்.

புகைப்படங்கள்: அல் ஜசீரா


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ


தினகரன் -ஸ்டாலின் பப்பீஸ் டீல் : அதிமுகவின் தேர்தல் திட்டம்!!


‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி


தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!


சிதம்பரத்தைத் தொடர்ந்து சிவக்குமார் கைது!


புதன், 4 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon