மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

ஜெ பயோபிக்: பின் வாங்கினாரா கௌதம்?

ஜெ பயோபிக்: பின் வாங்கினாரா கௌதம்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பல படங்கள் உருவாவதாக அறிவிக்கப்பட்டன. தற்போது அதற்கான பணிகளை பலர் முன்னெடுத்துவரும் நிலையில் கௌதம் மேனன், பிரசாத் முருகேசன் இணைந்து இயக்க, ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. திரைப்படமாக அல்லாமல் வெப்சீரிஸாக உருவாகவுள்ளதாக கூறப்பட்டது.

வாழ்க்கை வரலாற்றுத் தொடராக உருவானால் ஜெயலலிதா வாழ்க்கையிலிருந்து சில பகுதிகளை திரைக்கதையாக உருவாக்க வேண்டும். ஆனால் தற்போது ஜெயலலிதா கதையை பின்னணியாகக் கொண்டு புனைவாக இந்த வெப் சீரிஸை உருவாக்கவுள்ளனர்.

10 எபிசோடுகளுடன் தயாராகும் இந்த வெப்சீரிஸில் ரம்யா கிருஷ்ணன் ‘சக்தி’ என்ற பெயரில் தோன்றவுள்ளார். ‘குயின்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அஞ்சனா, அனிகா, மலையாள நடிகர் இந்திரஜித் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ


தினகரன் -ஸ்டாலின் பப்பீஸ் டீல் : அதிமுகவின் தேர்தல் திட்டம்!!


‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி


தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!


சிதம்பரத்தைத் தொடர்ந்து சிவக்குமார் கைது!


புதன், 4 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon