மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

சாதா கிருஷ்ணன் இல்லை ராதா கிருஷ்ணன்: அப்டேட் குமாரு

சாதா கிருஷ்ணன் இல்லை ராதா கிருஷ்ணன்: அப்டேட் குமாரு

தமிழிசை வேற ஆளுநராகிட்டாங்க, இனி நம்ம என்ன பண்றதுன்னு மனக் கஷ்டத்துல குமுறிக்கிட்டு இருந்தேன். என்னடா டோமர் சோகமா இருக்க, என் கேள்விக்கு பதில் சொல்லுன்னான். டேய் நடுவுல எதுவும் பேட் வேர்ட்ஸ் யூஸ் பண்ணியான்னு கேட்டா, இல்லைன்னு சத்தியம் பண்ணான். சரி சொல்லித் தொலைன்னு கேட்டா, “ஆதாரை இங்கிலீஸ்ல aadhaarனு எழுதியிருந்தாங்க மாப்ள. அதை திருப்பி படிச்சா, ‘ராதா’(raahdaa) அப்டின்னு வந்தது. அந்த ராதா யாரா இருக்கும்னு யோசிச்சேன். கடைசில பாத்தா நம்ம ராதா கிருஷ்ணன் ஐயாவா இருக்கும்போல.

தமிழ்நாட்டை சேர்ந்த தமிழிசை அக்காவை ஆளுநரா ஆக்குறதுக்கு முன்னாடியே, ஆதாருல பேரைப் போட்டு இன்னொரு தமிழனுக்கு இவ்ளோ பெரிய அங்கீகாரத்தை பா.ஜ.க குடுத்துருக்குன்னு நினைச்சா பெருமையா இருக்கு. அவர் சாதா கிருஷ்ணன் இல்லை ராதாகிருஷ்ணன்னு பேனர் அடிக்கப்போறேன்” அப்டின்றான்.

இவ்வளவு பெரிய ஆராய்ச்சிக்குப் பின்னாடியும் இவனை பா.ஜ.க-வுல சேர்க்காம இருக்க முடியாதுன்னு முடிவு பண்ணி கமலாலயம் கூட்டிட்டு போனா வரமாட்டேங்குறான். கேட்டா, நான் மிஸ்டு கால் குடுத்து கட்சில சேந்துக்குறேன் போடா வெண்ணெய்ன்னுட்டு ஓடிட்டான். நான் போய் அவனை கண்டுபுட்ச்சி சேத்து உட்டுட்டு வர்றேன். நீங்க அப்டேட்டை படிங்க.

mohanram.ko

குடிகாரர் ஒருவர் பேருந்தில் என் மீது விழுந்துடுவாரோன்னு, கொஞ்சம் தள்ளி நின்னா 'வீழ்வேன் என்று நினைத்தாயோ' னு சொல்லி சிரிக்கறாரு.

எனக்கொரு டவுட்டு

ஒரு வரியில் வரும் பதில்கள் அனைத்தும் விரக்தியின் வெளிப்பாடே..!

mohanram.ko

நிலவை கொண்டு வா, கட்டிலில் கட்டி வை, மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை

சந்திராயன் 2 வெற்றிகரமாக அனுப்பியாச்சினு சொன்னா போதுமே, உடனே பாட ஆரம்பிச்சிடுவீங்களே

ரமேஷ்.ஏ

சாமி வரம் கொடுத்தாலும்,பூசாரி கொடுக்கமாட்டாரு பழமொழி போல தான்...,

முதலாளி சம்பளம் போட்டாலும் ஏடிஎம் காசு இல்லனு சொல்றது....!!!

A.P.Perumal.

Breaking : ஆசிரியர்கள், தங்கள் சொத்து விபரங்களை தெரிவிக்க வேண்டும்" - தமிழக பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு

கடன் இருந்தாலும் சொல்லலாமா?

ரமேஷ்.ஏ

பின்லாந்தில் இசை கருவியை இசைந்து மகிழ்ந்த அமைச்சர் செங்கோட்டையன் # செய்தி.

"புரட்சியாளர்கள்,விஞ்ஞானி,குத்துசண்டைவீரர் வரிசையில் ஓர் இசை அமைப்பாளர்....!!!!"

கோழியின் கிறுக்கல்!!

பொது இடத்தில் பெண்கள் வாயை மூடி எதையோ மென்று கொண்டிருக்கிறார்கள் என்றால், கண்ணுக்கே தெரியாத இயர் போன் மாட்டிக் கொண்டு தம் காதலனுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று பொருள்!!!

கிப்சன்

இரு சக்கர வாகனங்களுக்கு வாகன விலையை விட அபராத கட்டணம் அதிகம் - செய்தி

இருக்கிற வண்டிய புடுங்கி வச்சிக்கிட்டா எல்லாரும் புதிய வண்டி வாங்குவாங்கல்ல பொருளாதாரமும் உயர்ந்துரும்ல

ஷிவானி சிவக்குமார்

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவோம் - சீமான்

தேர்தல் ஆணையத்திற்கும் வருமானம் வேனும்ல..! டெப்பாசிட்

எனக்கொரு டவுட்டு

பத்து நிமிஷத்தில் வந்துவிடுவேன் என்பது கண்டிஷன் அப்ளைக்கு உட்பட்டது..!

கோழியின் கிறுக்கல்!!

உண்மையில் பெண்களே அதிகம் பிறன் மனை நோக்குபவர்கள்!

"ஏங்க, பக்கத்து வீட்டு மாலதி எட்டு பவுன்ல ஆரம் வாங்கி இருக்காங்க"!!

A.P.Perumal.

மிகச்சிறந்த தெளிவை பெற மோசமான சில குழப்பங்களை சந்திக்க வேண்டியுள்ளது.

சித்ரா தேவி

கவர்னராக நியமிக்கப்பட்டதற்கு திரும்பத் திரும்ப மோடி அமித்ஷாவுக்கு நன்றி சொல்லும் தமிழிசை அக்கா.

கவர்னரை நியமிப்பது குடியரசுத் தலைவர்தானே. போற போக்குல ஒரு நன்றி சொன்னா என்னவாம் ?

பழைய சோறு

ரேசனில் அரிசி போடும் வரை புடைக்கும் முறமும் விற்றுக்கொண்டு தான் இருக்கும்..!

அன்புடன் கதிர்

ஸ்விட் வாங்கும் போது சாம்பிள் கொஞ்சம் கொடுங்க என்று கேட்டு சாப்பிடுவது சுகர் பேசன்ட்களின் டிசைன்

செந்திலின்_கிறுக்கல்கள்

வீட்டு அரசியலையும் நாட்டு அரசியலையும் ஒரே இடத்தில் கையாளுபவர் WhatsApp அட்மீனாக தான் இருக்கும்!

மெத்த வீட்டான்

நீங்க ஏன் வெளிநாடு சுற்றுப்பயணம் போகலன்னு கேட்டால் நான் குடியிருப்பதே சிட்னியில்தானே என்பதே செல்லூர் ராஜூவின் பதிலாக இருக்கும் !

மயக்குநன்

உழைப்பின் மூலம் தமிழிசைக்கு உயரிய பதவி கிடைத்திருக்கிறது!- ஓபிஎஸ்.

உங்களுக்கு 'தர்மயுத்தத்தின்' மூலம் கிடைச்ச மாதிரியா..?

A.P.Perumal.

திருடப்போன வீட்டில் பிரியாணி சமைத்து சாப்பிட்டு பின் திருடர்கள் திருடி சென்றனர்.

உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணிட்டிகளே.

mugavai abbas

விமர்சனங்களை தாங்கிக் கொண்டால் பின்பு விமரிசையாக வாழலாம்- தமிழிசை.

பின்ன ஏன்க்கா சோபியாவோட ஒரு விமர்சனத்துக்கு கொந்தளிச்சீங்க?

-லாக் ஆஃப்


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ


தினகரன் -ஸ்டாலின் பப்பீஸ் டீல் : அதிமுகவின் தேர்தல் திட்டம்!!


‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி


தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!


சிதம்பரத்தைத் தொடர்ந்து சிவக்குமார் கைது!


புதன், 4 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon