மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஜூலை 2020

தமிழகத்தின் கேபினெட் வெளிநாட்டில்: ஸ்டாலின்

தமிழகத்தின் கேபினெட் வெளிநாட்டில்: ஸ்டாலின்

தமிழகத்தின் கேபினெட்டே வெளிநாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்தின் மேலாளராக இருந்துவரும் பத்மநாபன் இல்லத் திருமண விழா இன்று (செப்டம்பர் 4) கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. அதில் திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

திருமணத்தை நடத்திவைத்துப் பேசிய ஸ்டாலின், “இந்தியாவின் பொருளாதாரம் பற்றி கடந்த 10 நாட்களாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஜிடிபி 5 சதவிகிதமாக சரிந்துள்ளது. 27 ஆண்டுகாலமாக இந்தியாவிற்கு இல்லாத ஒரு கொடுமை இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்றது. அந்த செய்திகள் கூட பத்திரிகைகளிலோ ஊடகங்களில் பார்க்க முடியவில்லை. அதை மூடி மறைக்கக்கூடிய திட்டம் நடக்கிறது. ஆனால், சமூகவலைதளங்களில் அவைகள் எல்லாம் தொடர்ந்து வெளிவருகின்றன. இவற்றையெல்லாம் மூடி மறைப்பதற்காகத்தான், ப.சிதம்பரத்தின் கைது, காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.” என்று விமர்சித்தார்.

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து பேசிய ஸ்டாலின், “முதல்வர் வெளிநாட்டிற்கு சென்றிருக்கின்றார். முதலீடு ஏதாவது கொண்டுவருவார் என்று எதிர்பார்த்து காத்திருப்பார்கள். ஆனால், தற்போது ஒரு கேபினெட்டே சென்றுள்ளது. ஒரு சுற்றுலா அமைச்சரவையாக அதிமுக அமைச்சரவை மாறியிருக்கிறது. இன்னும் ஏழெட்டு அமைச்சர்கள் வெளிநாடு செல்கிறார்கள் என்று செய்தி வந்திருக்கிறது” என்று சுட்டிக்காட்டி,

இரண்டு முறை நடந்துள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில், 5 இலட்சம் கோடிக்கு மேல் முதலீடு வந்திருக்கின்றது என்று சொல்கிறார்கள். இதுதொடர்பாக வெள்ளை அறிக்கையாக வெளியிடுங்கள் என்று சட்டமன்றத்தில் பேசினேன். ஆனால், இன்று வரையில் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் இப்போது முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வெளிநாடு சென்றிருக்கிறார்கள் என்றும் விமர்சித்தார்.

மேலும், “முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் 98. இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 304. தற்போது ஏறக்குறைய 16 தொழிற்சாலைகள் வரப்போவதாக செய்தி வந்துள்ளது. இவைகளெல்லாம் ஒரு அறிவிப்பாக மட்டும் இருக்கிறது” என்றும் குற்றம்சாட்டினார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ


தினகரன் -ஸ்டாலின் பப்பீஸ் டீல் : அதிமுகவின் தேர்தல் திட்டம்!!


‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி


தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!


சிதம்பரத்தைத் தொடர்ந்து சிவக்குமார் கைது!


புதன், 4 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon