மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஜூலை 2020

புல்வாமா தாக்குதலுக்கு இதுதான் காரணம் : சிஆர்பிஎஃப்

புல்வாமா தாக்குதலுக்கு இதுதான் காரணம் : சிஆர்பிஎஃப்

உளவுத் துறை குளறுபடியே புல்வாமா தாக்குதலுக்குக் காரணம் என்று சிஆர்பிஎஃப் இண்டர்னல் ரிப்போர்ட் மூலம் தெரியவந்துள்ளது.

2019 பிப்ரவரி 14ஆம் தேதி காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு நடத்திய தீவிரவாத தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்துக்கு உளவுத் துறை முன்கூட்டியே எச்சரிக்காததுதான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் இதற்கு மத்திய அரசு மறுப்புத் தெரிவித்திருந்தது. கடந்த ஜூன் 26ஆம் தேதி நாடாளுமன்றத்தில், காங்கிரஸ் எம்.பி. நசீர் ஹூசைன், “தேசிய நெடுஞ்சாலையில் சிஆர்பிஎஃப் வாகனங்களுக்கு இடையே 300கிலோ எடை கொண்ட வெடி மருந்து நிரப்பிய கார் எப்படி வந்தது” என்று கேள்வி எழுப்பியிருந்தார், இதற்குப் பதில் அளித்த கிஷான் ரெட்டி, “ஜம்மு காஷ்மீர் கடந்த 30 ஆண்டுகளாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் ஏராளமான பயங்கரவாதிகள் நடுநிலைப்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்து உளவுத் துறை அமைப்புகளும் ஒருங்கிணைந்த முறையில் செயல்படுகின்றன. உள்துறை அமைச்சகமும், அனைத்து அமைப்புகளுக்கும் தக்க நேரத்தில் தகவல்களைத் தருகின்றன” என்று பதில் அளித்திருந்தார்.

உளவுத் துறையின் தோல்வியும் புல்வாமா தாக்குதலுக்கு ஒரு காரணம் என்ற புகாருக்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் அமைச்சர் கிஷான் ரெட்டி தெரிவித்திருந்தார். இந்தநிலையில் புல்வாமா தாக்குதல் குறித்து சிஆர்பிஎஃப் விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. உளவுத் துறையின் குளறுபடியும் புல்வாமா தாக்குதலுக்குக் காரணம் என்று சிஆர்பிஎஃப் அறிக்கையில் தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது, புல்வாமா தாக்குதலுக்கு முன்னதாக வழக்கம்போல் விடுக்கும் ஒரு பொதுவான எச்சரிக்கையாகத்தான் இருந்தது. கார் மூலம் தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் குறித்து எந்த எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருக்கும் எந்த ஒரு உளவுத் துறை அமைப்புகளும் தாக்குதல் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளது,

மேலும், வழக்கத்திற்கு மாறாக கான்வாய்கள் அதிகளவு ஒரே நேரத்தில் சென்றது தாக்குதலுக்கு ஒரு காரணம். இது தீவிரவாதிகளுக்குச் சாதகமாக அமைந்திருக்கிறது. வீரர்கள் சென்ற கான்வாய்களுக்கு மத்தியில் பொது வாகனங்களும் அனுமதிக்கப்பட்டன. விதிமுறைகளின் படி நான்கு வாகனங்களுக்கு இடையில் இடைவெளி விட்டு செல்லும் நடைமுறை பின்பற்றப்பட்டதால் தான் ஒரு வாகனத்துக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது. கான்வாய்களின் வாகனத்திலிருந்த கேமராவில் பதிவான வீடியோவில் மோகன் லால் என்ற வீரர், தற்கொலைப் படை தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட காரை தடுத்து நிறுத்துவதற்கு முயன்றதும் பதிவாகியிருக்கிறது. அவர் இறக்க போகும் சில நொடிகளுக்கு முன்னர் தைரியத்துடன் இச்செயலில் ஈடுபட்டுள்ளார்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

15 பக்கம் கொண்ட அந்த அறிக்கை சிஆர்பிஎஃப் டிஜி முன்பு கடந்த மே மாதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் டிஜி ஆர்.ஆர்.பட்நாகர், எனது டேபிலுக்கு இன்னும் அந்த அறிக்கை வரவில்லை, எனவே இதுகுறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ


தினகரன் -ஸ்டாலின் பப்பீஸ் டீல் : அதிமுகவின் தேர்தல் திட்டம்!!


‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி


தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!


சிதம்பரத்தைத் தொடர்ந்து சிவக்குமார் கைது!


புதன், 4 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon