மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

நடத்துநருக்கு அடி...பின்னியெடுத்த பொதுமக்கள்!

நடத்துநருக்கு அடி...பின்னியெடுத்த பொதுமக்கள்!

சென்னை எழும்பூர் இரயில் நிலையம் அருகே, மாநகர பேருந்து நடத்துநர் ஒருவரை தாக்கியதாகக் கூறி தெலங்கானா மாநில மாணவர்களைப் பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த ஐந்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்தனர். அவர்கள் சென்னையை சுற்றி பார்ப்பதற்காக செல்லும் வழியில் 29ஏ தடம் எண் கொண்ட பேருந்தில் ஏறியிருந்தார்கள். அந்த பேருந்தில் அவர்கள் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது, பேருந்து நடத்துநர் வில்சனுக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அந்த மாணவர்களுள் ஒருவரான லட்சுமணன், பேருந்து நடத்துநர் வில்சனை கீழே தள்ளிவிட்டார். இதனால் பிரச்சனை பெரிதானது. தொடர்ந்து சென்னை எழும்பூர் இரயில் நிலையம் அருகே வந்த போது பேருந்து நிறுத்தப்பட்டு மாணவர்கள் கீழே இறக்கி விடப்பட்டனர். அங்கே இருந்த பொதுமக்கள் மாணவர்களை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த எழும்பூர் காவல்நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பேருந்து நடத்துனர் வில்சன் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாணவர்களை அழைத்து காவலர்கள் விசாரித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மின்னம்பலம் யூடியூப் பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்ய...


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ


தினகரன் -ஸ்டாலின் பப்பீஸ் டீல் : அதிமுகவின் தேர்தல் திட்டம்!!


‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி


தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!


சிதம்பரத்தைத் தொடர்ந்து சிவக்குமார் கைது!


புதன், 4 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon