மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

ஆளுநர் தமிழிசை: 8ஆம் தேதி பதவியேற்பு!

ஆளுநர் தமிழிசை: 8ஆம் தேதி பதவியேற்பு!

தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன் அதற்கான நியமன ஆணையைப் பெற்றுக்கொண்டார்.

தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக பாஜக தமிழகத் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 1ஆம் தேதி நியமித்தார். அவருக்குக் கடந்த இரண்டு நாட்களாகப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தெலங்கானா பவன் அதிகாரி வேதாந்தகிரி நேற்று (செப்டம்பர் 3) சென்னை வருகை தந்து ஆளுநர் நியமன ஆணையை தமிழிசையிடம் வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “தெலங்கானா முதல்வர், தலைமை நீதிபதி ஆகியோரிடம் கலந்தாலோசித்து பதவியேற்பு விழாவுக்கான தேதியைத் தெரிவிப்பேன். தெலங்கானாவின் ஆளுநராகத் தமிழகத்தின் சகோதரி செல்கிறேன். அதற்கான ஆணையைப் பெற்றுக்கொண்டுள்ளேன். இது தமிழகத்துக்குப் பெருமை. அனைத்துத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுவதுதான் எனது வழக்கம். அதனால் ஆளுநர் பணியிலும் நான் சிறப்பாகச் செயல்படுவேன்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் வரும் 8ஆம் தேதி தெலங்கானாவின் ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்கவுள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க


தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!


டிஜிட்டல் திண்ணை: திமுக புள்ளிகளுக்கு பாஜக வலை!


பிக் பாஸ் 3: கவின் காலி செய்த பிக் பாஸ் ஸ்கிரிப்ட்!


அதிகாரம் - அறநெறி: சமகாலத்தின் இரு சாட்சிகள்!


5%: கஸ்டடியில் இருந்து மோடியை கலாய்த்த ப.சி


புதன், 4 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon