மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 15 ஜன 2021

முப்பது நாட்களாக மூடிக் கிடக்கும் காஷ்மீர்

முப்பது நாட்களாக மூடிக் கிடக்கும் காஷ்மீர்

சரியாக முப்பது நாட்களுக்கு முன் ஆகஸ்டு 5 ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்படும் அறிவிப்பை வெளியிட்டார்.

அதற்கு ஒரு நாள் முன்னதாக ஆகஸ்டு 4 ஆம் தேதியில் இருந்தே ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகள் முழுக்க முழுக்க ராணுவம், சிஆர்பிஎஃப் என்று பாதுகாப்புப் படைகளின் வசம் கொண்டுவரப்பட்டது. ஒரு மாதம் ஆகும் நிலையில் இன்றும் காஷ்மீரில் பெரிதாக மாற்றமில்லை.

கடை வீதிகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் என்று ஒரு மாதம் வரையும் எதுவும் இன்னும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவில்லை. காஷ்மீரில் இருக்கும் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு கடந்த ஆகஸ்டு 5 ஆம் தேதி முதல் பாஸ்போர்ட் கேட்டு யாரும் விண்ணப்பிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

கடந்தவாரம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டதாக அறிவித்தாலும் மாணவர்களின் வருகைப் பதிவு மிகக் குறைவாகவே காணப்படுகிறது. மேலும் பொது சுகாதாரத்துறை, மின்சாரத்துறை போன்ற அத்தியாவசிய அரசு அலுவலகங்களில் கூட 50 சதவிகிதம் அரசு ஊழியர்கள்தான் வந்து செல்கிறார்கள்.

ஜம்மு காஷ்மீர் அரசின் செய்தித் தொடர்பாளர் ஹோஹித் கன்சால் இதுபற்றிச் சொல்லும்போது, “படிப்படியாக வருகைப் பதிவு அதிகரித்து வருகிறது” என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார். அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த காஷ்மீரின் வாழ்க்கை முப்பது நாட்களாகியும் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்றே காஷ்மீர் பற்றிய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ


‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி


தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!


சிதம்பரத்தைத் தொடர்ந்து சிவக்குமார் கைது!


பிக் பாஸ் 3: கவின் காலி செய்த பிக் பாஸ் ஸ்கிரிப்ட்!


புதன், 4 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon