மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 1 டிச 2020

ரூ.2,780 கோடி முதலீடு: எடப்பாடி முன்னிலையில் ஒப்பந்தம்!

ரூ.2,780 கோடி முதலீடு: எடப்பாடி முன்னிலையில் ஒப்பந்தம்!

ரூ.2,780 கோடி முதலீட்டில் தமிழகத்தில் தொழில் தொடங்கும் வகையில் 16 நிறுவனங்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்குச் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார், இங்கிலாந்து பயணத்த முடித்த அவர் அமெரிக்காவுக்குக் கடந்த 2ஆம் தேதி சென்றடைந்தார். இந்நிலையில் நேற்று இரவு (செப்டம்பர் 3) நியூயார்க் நகரில் முதல்வர் முன்னிலையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் ரூ.2,780 கோடியில் தொழில் தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் அதிகளவு முதலீடு செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்ய தமிழகம் உகந்த மாநிலம் என்றும் தடையற்ற மின்சாரம், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் திறன் மிக்க மனிதவளம் ஆகியவை தமிழகத்தில் உள்ளதாகவும் இந்த கூட்டத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொழில் தொடங்க ஏதுவாக 8 ஆயிரம் ஏக்கர் தயார் நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, ரூ,2,780 கோடி மதிப்பில் தமிழகத்தில் தொழில் தொடங்க 16 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த 16 நிறுவனங்களில் ஜீன் மார்ட்டின், அகியுல் சிஸ்டம்ஸ் , சிட்டஸ் பார்ம், எமர்சன் உள்ளிட்ட நிறுவனங்களும் அடங்கும். ஹால்டியா பெட்ரோகெமிக்கல்ஸ், நாப்தா கிராக்கர் ஆகிய இரு நிறுவனங்கள் 50 கோடி ரூபாய் மதிப்பில் தமிழகத்தில் உற்பத்தி ஆலை அமைக்க கொள்கை அளவில் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் ஏற்கெனவே முதலீடு செய்துள்ள கேட்டர்பில்லர், ஃபோர்ட் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டு பேசினர். அப்போது தமிழகத்தில் தங்கள் நிறுவனங்களுக்குக் கிடைத்த சிறப்பான அனுபவத்தைத் தெரிவித்தனர்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ


‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி


தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!


சிதம்பரத்தைத் தொடர்ந்து சிவக்குமார் கைது!


பிக் பாஸ் 3: கவின் காலி செய்த பிக் பாஸ் ஸ்கிரிப்ட்!


புதன், 4 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon