மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

புதுச்சேரி துணை சபாநாயகர் போட்டியின்றி தேர்வு!

புதுச்சேரி துணை சபாநாயகர் போட்டியின்றி தேர்வு!

புதுச்சேரி சட்டமன்ற துணை சபாநாயகராகக் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆர்.பாலன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகராக இருந்த வைத்தியலிங்கம் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.ஆனார். இதனால் துணை சபாநாயகராக இருந்த சிவக்கொழுந்து ஒரு மனதாக சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், இதனால் துணை சபாநாயகர் இடம் காலியாக இருந்தது. இந்நிலையில் காலியாக உள்ள துணை சபாநாயகர் பதவிக்கு வரும் செப்டம்பர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று சட்டமன்றத்தில் சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

இன்று (செப்டம்பர் 4) துணை சபாநாயகர் தேர்தலுக்குக் காங்கிரஸ் சார்பில் ஆர்.பாலன் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். எதிர்க்கட்சி சார்பில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் அவர், துணை சபாநாயகராகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தான் வகித்து வந்த சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து, முதலமைச்சர் நாராயணசாமியிடம் பாலன் கடிதம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 4 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon