மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

அஜித் 61: மீண்டும் பாலிவுட் ரீமேக்?

அஜித் 61: மீண்டும் பாலிவுட் ரீமேக்?

அஜித் நடிக்கவுள்ள புதிய படமும் பாலிவுட் ரீமேக்கில் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. பாலிவுட்டில் வெளியான பிங்க் திரைப்படத்தின் ரீமேக்காக இப்படம் உருவானது. தற்போது அதே கூட்டணி மற்றொரு படத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ‘அஜித் 60’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் படக்குழு இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

இந்நிலையில் ‘அஜித் 61’ திரைப்படம் பற்றிய தகவல்கள் கோலிவுட் வட்டாரங்களில் உலாவருகின்றன. பாலிவுட்டில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையேயும், விமர்சனரீதியாகவும் வரவேற்பு பெற்ற படம் ‘ஆர்டிகிள் 15’. ஆயுஷ்மான் குரானா நடித்த இப்படம் சாதிப் பிரச்சினைகளின் பின்னணியில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியது. இந்தப் படத்தைப் பார்த்த அஜித் இதன் ரீமேக்கில் நடிக்க விருப்பம் காட்டியதாக கூறப்படுகிறது.

பிங்க் திரைப்படம் வணிக ரீதியான வசூலுக்கு உத்தரவாதம் அளித்ததுடன் சமூக கருத்துக்களை உள்ளடக்கியதாக இருந்தது. ‘ஆர்டிகிள் 15’ படமும் அதே பாணியில் உருவாகியிருப்பதால் இந்தப் படத்தின் ரீமேக்கில் அஜித் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ


‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி


தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!


சிதம்பரத்தைத் தொடர்ந்து சிவக்குமார் கைது!


பிக் பாஸ் 3: கவின் காலி செய்த பிக் பாஸ் ஸ்கிரிப்ட்!


புதன், 4 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon