மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஜூலை 2020

ஓய்வை அறிவித்த ஜிம்பாவே கேப்டன் மசகாட்ஸா

ஓய்வை அறிவித்த ஜிம்பாவே கேப்டன் மசகாட்ஸா

ஜிம்பாவே கேப்டன் ஹாமில்டன் மசகாட்ஸா தனது 18 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்விலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஹாமில்டன் மசகாட்ஸா (36) அறிமுகமான டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த உலகின் இளம் கிரிக்கெட் வீரர் என்ற உலக சாதனையை படைத்தவர். 2001ஆம் ஆண்டில் நடைபெற்ற இப்போட்டியில் 17 வயதேயான மசகாட்ஸா மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 119 ரன்கள் எடுத்து இச்சாதனையை படைத்தார். இதுவரை 38 டெஸ்ட் போட்டிகள், 209 ஒருநாள் போட்டிகள், 62 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார் மசகாட்ஸா. மொத்தமாக 10 சதங்கள், 42 அரை சதங்கள் உள்பட 9,410 ரன்கள் குவித்துள்ளார்.

வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக வரும் 13ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஜிம்பாவே டி20 முத்தரப்பு தொடரில் விளையாடுகிறது. இத்தொடருக்குப் பின் அணியின் கேப்டனான இவர் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் ட்விட்டரில் கூறுகையில், "வங்கதேசத்தில் நடக்கும் டி20 முத்தரப்பு தொடர் முடிந்த பின், ஹேமில்டன் மசகாட்ஸா அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்" எனத் தெரிவித்தது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ


‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி


தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!


சிதம்பரத்தைத் தொடர்ந்து சிவக்குமார் கைது!


பிக் பாஸ் 3: கவின் காலி செய்த பிக் பாஸ் ஸ்கிரிப்ட்!


புதன், 4 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon