மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஞ்சலி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஞ்சலி

முன்னணி இயக்குநர்கள் பலருடன் இணைந்து பணியாற்றியுள்ள அஞ்சலி தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கிறார்.

பேரன்பு, லிசா ஆகிய படங்களைத் தொடர்ந்து அஞ்சலி கைவசம் நாடோடிகள் 2, கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் உருவாகும் படம், மாதவன் நடிக்கும் சைலன்ஸ் ஆகிய படங்கள் உள்ளன.

தற்போது அஞ்சலி விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். நான்கு குறும்படங்களை உள்ளடக்கிய ஆந்தலாஜி பாணியில் உருவாகும் இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்துக்காகத் தயாராகிறது. நான்கு இயக்குநர்கள் இயக்கும் இந்தப் படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கும் குறும்படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார்.

மற்ற குறும்படங்களை வெற்றி மாறன், சுதா கொங்காரா, கௌதம் மேனன் ஆகியோர் இயக்குகின்றனர். தற்போது விக்னேஷ் சிவன் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ள நிலையில் அந்த குறும்படங்களின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இவை தவிர விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயனை கதாநாயகனாகக்கொண்டு புதிய படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.


மேலும் படிக்க


தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!


டிஜிட்டல் திண்ணை: திமுக புள்ளிகளுக்கு பாஜக வலை!


பிக் பாஸ் 3: கவின் காலி செய்த பிக் பாஸ் ஸ்கிரிப்ட்!


அதிகாரம் - அறநெறி: சமகாலத்தின் இரு சாட்சிகள்!


5%: கஸ்டடியில் இருந்து மோடியை கலாய்த்த ப.சி


புதன், 4 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon