மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

பிரெக்ஸிட்: பெரும்பான்மையை இழந்த போரிஸ் ஜான்சன்

பிரெக்ஸிட்: பெரும்பான்மையை இழந்த போரிஸ் ஜான்சன்

பிரிட்டனின் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரெக்ஸிட் வாக்கெடுப்பில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததால் ஆளும் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரெக்ஸிட் நடவடிக்கை தொடர்பாக கடந்த 2016ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பான்மை மக்கள் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவாக வாக்களித்ததைத் தொடர்ந்து, 2019 மார்ச் 29ஆம் தேதிக்குள் ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

பிரெக்ஸிட்டை எதிர்த்து, பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகியதைத் தொடர்ந்து தெரசா மே புதிய பிரதமராகப் பொறுப்பேற்று பிரெக்ஸிட்டுக்கான நடவடிக்கையைத் தீவிரப்படுத்தினார். பின்னர் ‘பிரெக்ஸிட்’ மசோதாவைத் தாக்கல் செய்து, நாடாளுமன்ற ஒப்புதலை பெற பலமுறை ஓட்டெடுப்பு நடந்தது. ஆனாலும் இவ்விவகாரத்தில் எம்.பி.க்களின் ஆதரவைப் பெற முடியாததால், தெரசா மே தனது பிரதமர் பதவியைக் கடந்த மே மாதம் ராஜினாமா செய்தார்.

உடன்படிக்கை எட்டுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்ததால், அக்டோபர் 31ஆம் தேதி வரை பிரெக்ஸிட் விவகாரத்தில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னர் இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி போரிஸ் ஜான்சன் பிரதமராகப் பதவியேற்றார்.

தொடக்கக் காலத்திலிருந்தே பிரெக்ஸிட்டுக்கு ஆதரவு தெரிவித்துவரும் போரிஸ் ஜான்சன், பிரிட்டனின் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, உடன்படிக்கைக்கு ஆதரவிருந்தாலும் எதிர்ப்பிருந்தாலும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதி என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், பிரெக்சிட்டை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தத்தில் நேற்று (செப்டம்பர் 3) நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த எம்.பி பிலிப் லீ, லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியில் இணைந்தார். இதனால், நாடாளுமன்றத்தில் போரிஸ் ஜான்சன் பெரும்பான்மையை இழந்துள்ளார்.

மேலும், பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. இதனால் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் ஒப்பிடப்பட்ட இங்கிலாந்தின் புதிய பிரதமரான போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


மேலும் படிக்க


தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!


டிஜிட்டல் திண்ணை: திமுக புள்ளிகளுக்கு பாஜக வலை!


பிக் பாஸ் 3: கவின் காலி செய்த பிக் பாஸ் ஸ்கிரிப்ட்!


அதிகாரம் - அறநெறி: சமகாலத்தின் இரு சாட்சிகள்!


5%: கஸ்டடியில் இருந்து மோடியை கலாய்த்த ப.சி


புதன், 4 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon