மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 செப் 2019

ரஷ்யா புறப்பட்டார் மோடி

ரஷ்யா புறப்பட்டார் மோடி

ரஷ்யாவில் நடைபெறும் கிழக்கு பொருளாதாரக் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் மோடி டெல்லியிலிருந்து விமானம் மூலம் நேற்று (செப்டம்பர் 3) மாலை ரஷ்யா புறப்பட்டுச் சென்றார்.

விளாடிவோஸ்டோக்கிற்குச் செல்லும் பிரதமர் மோடி, தனது பயணத்தின் ஒரு பகுதியாக, கிழக்கு பொருளாதாரக் கூட்டமைப்பின் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இந்தப் பயணம் குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது நண்பரான ரஷ்ய அதிபர் புதினுடன் இருதரப்பு உறவின் அனைத்து அம்சங்கள் மற்றும் பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஆவலாக இருக்கிறேன். எனது பயணம், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் கொண்டுள்ள ஆர்வத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

கிழக்கு பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளும் மோடி, இந்தியா - ரஷ்யா 20ஆம் ஆண்டு உச்சி மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார். விளாடிவோஸ்டோக்கில் உள்ள ஸ்வெஸ்டா கப்பல் கட்டும் தளத்திற்குச் செல்லும் மோடி, கப்பல் கட்டும் துறையில் ரஷ்யாவின் முன்மாதிரியான திறன்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கும், இதில் இந்தியா ஒத்துழைப்பதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என்பதை அவர் ஆராயவுள்ளதாகவும் தெரிகிறது. இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான கலாச்சார ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையிலும், ‘தேசத்தின் தந்தை’ மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளை நினைவுகூரும் வகையிலும் பிரதமர் ஒரு சிறப்பு ஸ்டாம்பை வெளியிடுகிறார். நாட்டில் யோகாவைப் பிரபலப்படுத்தும் நோக்கில் மொபைல் ஆப் ஒன்றையும் மோடி அறிமுகப்படுத்துகிறார்.

மேலும், ரஷ்ய அதிபர் உடனான இந்தச் சந்திப்பில் பாதுகாப்பு உட்பட பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. செப்டம்பர் 4 மற்றும் 5 தேதிகளில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு மோடி டெல்லி திரும்பியதும், செப்டம்பர் 9ஆம் தேதி இந்தியா வரும் இஸ்ரேல் பிரதமருடன் சந்திப்பு நடைபெறுவதாக இருந்தது.

முதலில், பிரதமர் மோடியைச் சந்திப்பதற்காக செப்டம்பர் 9ஆம் தேதி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இந்தியா வருவதாக அந்நாட்டு அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 17ஆம் தேதி இஸ்ரேலில் பொதுத் தேர்தல் நடைபெற இருப்பதால் அதன் காரணமாக இந்தியாவுக்கு வருகை தர முடியவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க


தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!


டிஜிட்டல் திண்ணை: திமுக புள்ளிகளுக்கு பாஜக வலை!


பிக் பாஸ் 3: கவின் காலி செய்த பிக் பாஸ் ஸ்கிரிப்ட்!


அதிகாரம் - அறநெறி: சமகாலத்தின் இரு சாட்சிகள்!


5%: கஸ்டடியில் இருந்து மோடியை கலாய்த்த ப.சி


கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

4 நிமிட வாசிப்பு

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

புதன் 4 செப் 2019