மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஜூலை 2020

கூடுதல் அரிசி, மண்ணெண்ணெய்: மத்திய அரசிடம் தமிழகம்!

கூடுதல் அரிசி, மண்ணெண்ணெய்: மத்திய அரசிடம் தமிழகம்!

தமிழகத்துக்குக் கூடுதல் அரிசி, மண்ணெண்ணெய் வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு அமைச்சர் காமராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லி சென்றுள்ள தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ், ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் நேற்று (செப்டம்பர் 3) நடந்த உணவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், “தமிழகத்திற்கான 330 கோடியே 47 லட்சம் ரூபாயை விடுவிக்க வேண்டும்” எனக் கோரினார். மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தால் தமிழக அரசின் இலவச அரசி விநியோகத் திட்டத்துக்கு எந்த பாதிப்பும் நேரக்கூடாது எனவும் வலியுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்துப் பேசிய அமைச்சர் காமராஜ் கோரிக்கை மனுக்களையும் அளித்தார். தர்மேந்திர பிரதானிடம் தமிழகத்துக்குக் கூடுதல் மண்ணெண்ணெய் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

சந்திப்புகளை முடித்துக்கொண்டு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காமராஜ், “மத்திய அரசின் தொகுப்பிலிருந்து தமிழகத்துக்குக் கூடுதலாக 3 லட்சம் மெட்ரிக் டன் அரிசி வழங்க வேண்டுமென வலியுறுத்தினேன். இதன்மூலம் தமிழகத்துக்கு ஆண்டொன்றுக்கு ரூ.1,000 கோடி கூடுதல் செலவு தவிர்க்கப்படும். மண்ணெண்ணெய்யின் அளவை வரும் காலத்தில் 23 ஆயிரத்து 35 கிலோ லிட்டராக உயர்த்தித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். நிறுத்தப்பட்ட பருப்பு, பாமாயில் மானியத்தைத் தொடருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம். விலைவாசி உயர்வைச் சமாளிக்க அனைத்து மாநிலங்களுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தோம்” என்று தெரிவித்தார்.

மேலும், “3,000 ரேஷன் பொருள் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. ரேஷன் பொருள் கடத்தலைத் தடுப்பதில் தமிழகம் முன்னிலையில் உள்ளது” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.


மேலும் படிக்க


தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!


டிஜிட்டல் திண்ணை: திமுக புள்ளிகளுக்கு பாஜக வலை!


பிக் பாஸ் 3: கவின் காலி செய்த பிக் பாஸ் ஸ்கிரிப்ட்!


அதிகாரம் - அறநெறி: சமகாலத்தின் இரு சாட்சிகள்!


5%: கஸ்டடியில் இருந்து மோடியை கலாய்த்த ப.சி


புதன், 4 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon