மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஏப் 2020

சென்னை : சுற்றுச்சூழலைக் கண்காணிக்கக் குழு!

சென்னை : சுற்றுச்சூழலைக் கண்காணிக்கக் குழு!

சென்னையில் சுற்றுச் சூழலை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆரம்பச் சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் உருவாகும் மருத்துவ கழிவுகள் மற்றும் திடக்கழிவுகளைக் கையாள்வதற்குத் திடக்கழிவு மேலாண்மை சட்டம் 2016 இன் கீழ் தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த ஜூலை மாதம் ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி மாவட்ட அளவில் சுற்றுச்சூழலைக் கண்காணிக்கக் குழு அமைக்க வேண்டும். அந்த குழு மாதம் ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இந்த மாவட்ட அளவிலான குழுவில், உள்ளாட்சி மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த குழு மருத்துவ மற்றும் திடக் கழிவுகள் எப்படிக் கையாளப்படுகின்றன என்பது குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் அந்த அறிக்கையை இணையத்தில் வெளியிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின் பேரில் சென்னையில் சுற்றுச்சூழலைக் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது,

மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவில், வருவாய்த்துறை அதிகாரி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், மாவட்ட சுகாதார ஆய்வாளர், மீன்வளத் துறை துணை இயக்குநர் உட்பட 16 பேர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு அடுத்த மாதம் முதல் அறிக்கை தாக்கல் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: திமுக புள்ளிகளுக்கு பாஜக வலை!


அதிகாரம் - அறநெறி: சமகாலத்தின் இரு சாட்சிகள்!


ரஜினிக்கு அதிகரிக்கும் அழுத்தம்!


ஜெ. நினைவிடம்: வெளிநாட்டில் இருந்தபடி பன்னீரை ஆட்டுவிக்கும் எடப்பாடி


சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் அளித்த சலுகை!


செவ்வாய், 3 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon